Home Uncategorized இரவு டிபனுக்கு ருசியான சப்பாத்தி நூடுல்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட...

இரவு டிபனுக்கு ருசியான சப்பாத்தி நூடுல்ஸ் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

சப்பாத்தி சாப்பிட்டு உடல் எடைய குறைக்க முடிவு பண்ணி இருப்போம். கோதுமை உணவுகளை சாப்பிடுவதற்கு நம்ம ஹெல்தியா இருக்கணும் அப்படின்னா ஆசைப்பட்டு சப்பாத்தி இன்னும் சில கோதுமையில் செய்யப்பட்ட ஐட்டம் எல்லாம் நிறைய சாப்பிட்டு வெயிட் குறைக்க போறோம் அப்படின்னு நினைச்சுட்டு பிளான் பண்ணி இருப்போம். ஆனால் நம்மளால இந்த உணவுகள் மேல இருக்கிற ஒரு இஷ்டத்தை கம்மி பண்ணவே முடியாது.

-விளம்பரம்-

அப்படி உங்களுக்கு நூடுல்ஸ் சாப்பிடணும் ரொம்ப ஆசையா இருக்கு நூடுல்ஸ் எல்லாம் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது அப்படின்னு பீல் பண்ணீங்களா. டயட்ல இருக்கும்போது நீங்க இந்த மாதிரி செய்து சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு ரொம்பவே நல்லா இருக்கும். உங்களுக்கு புடிச்ச மாதிரியும் நீங்க நூடுல்ஸ் சாப்பிட்ட ஃபீலும் உங்களுக்கு கிடைக்கும். அது என்னடா சப்பாத்தி நூடுல்ஸ் அப்படின்னு யோசிக்கிறீங்களா? நம்ம சப்பாத்தியை நூடுல்ஸா பண்ணி சாப்பிட போறோம் அது எப்படி செய்யலாம் என்று தெரிந்துகொள்ள இருக்கோம்.

இந்த சப்பாத்தி நூடுல்ஸ் ரொம்ப ரொம்ப சுலபம் என்னடா இப்படி பண்ணிட்டாங்களே அப்படின்னு யோசிக்கிற மாதிரி ரொம்பவே சிம்பிளா இருக்கும். இந்த சப்பாத்தி நூடுல்ஸ் ரொம்பவே சுவையாகவும் ருசியாவும் டேஸ்டாவும் இருக்கும் செய்யறதுக்கும் ரொம்ப டைம் எடுக்காது. உங்ககிட்ட சப்பாத்தி எக்ஸ்ட்ரா இருக்கா அப்ப நீங்க இந்த சப்பாத்தி நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகள் இது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இதை நீங்க மாலை நேர சிற்றுண்டி ஆகவும் எடுத்துக்கலாம். இல்லை நைட்டுக்கு டின்னர் இல்லை காலை டிபன் அந்த மாதிரி எதுக்கு வேணாலும் கொடுக்கலாம். ரொம்பவே டேஸ்டா இருக்கும் இந்த சப்பாத்தி நூடுல்ஸ் சரி வாங்க எப்படி சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் சீக்கிரமா சட்டுன்னு செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
5 from 1 vote

சப்பாத்தி நூடுல்ஸ் | Chappathi noodles recipe in tamil

இந்த சப்பாத்தி நூடுல்ஸ் ரொம்ப ரொம்ப சுலபம் என்னடா இப்படி பண்ணிட்டாங்களே அப்படின்னு யோசிக்கிற மாதிரி ரொம்பவே சிம்பிளா இருக்கும். இந்த சப்பாத்தி நூடுல்ஸ் ரொம்பவே சுவையாகவும் ருசியாவும் டேஸ்டாவும் இருக்கும் செய்யறதுக்கும் ரொம்ப டைம் எடுக்காது. உங்ககிட்ட சப்பாத்தி எக்ஸ்ட்ரா இருக்கா அப்ப நீங்க இந்த சப்பாத்தி நூடுல்ஸ் செய்து சாப்பிட்டு குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகள் இது ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இதை நீங்க மாலை நேர சிற்றுண்டி ஆகவும் எடுத்துக்கலாம். இல்லை நைட்டுக்கு டின்னர் இல்லை காலை டிபன் அந்த மாதிரி எதுக்கு வேணாலும் கொடுக்கலாம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Baby Corn Veg Noodles, chapathi rool, Chappathi Noodles, Japanese Noodles
Yield: 8 People
Calories: 153kcal
Cost: 50

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 5 சப்பாத்தி
  • 2 முட்டை
  • 1  வெங்காயம்
  • 1 தக்காளி                      
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1/2 ஸ்பூன் கரம் மசாலா 
  • 1 துண்டு பட்டை 
  • 1 ஏலக்காய்      
  • 1 கொத்து கறிவேப்பிலை

  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சப்பாத்திகளை நன்றாக ரோல் போல சுருட்டி கொள்ள வேண்டும். பிறகு அவற்றை கத்திகளை வைத்து நறுக்கிக் கொள்ள வேண்டும் இப்பொழுது சப்பாத்திகள் உங்களுக்கு நூடுல்ஸ் போல் நீள நீளமாக கிடைக்கும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை ,ஏலக்காய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பிறகு அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது ,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக வதக்கி விட வேண்டும் .இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள சப்பாத்திகளை சேர்த்து நன்றாக கலந்து விட்டு பரிமாறினால் சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார்

Nutrition

Calories: 153kcal | Carbohydrates: 10g | Protein: 16g | Fat: 25g