Home அசைவம் சீஸ் ஆம்லெட் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

சீஸ் ஆம்லெட் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

வீட்லயும் சரி கடைகளில் போய் சரி நம்ம என்ன சாப்பிட்டாலும் அதுக்கப்புறம் ஒரு ஆம்லெட் கண்டிப்பாக சாப்பிடுவோம். பசிக்குது அப்படின்னா கூட வீட்ல எதுவும் இல்லன்னா ஒரு முட்டை இருந்தா போதும் அதை வச்சு நம்ம ஆம்லேட் செஞ்சு சாப்பிடுவோம். அந்த அளவுக்கு எல்லாருக்குமே ஆம்லெட் ரொம்பவே புடிக்கும் ஆம்லெட் பிடிக்காதவங்களே இல்லை அப்படின்னு கூட சொல்லலாம். ஆனா பிளைன் ஆம்லெட் ஒரு சிலருக்கு பிடிக்கும்.

-விளம்பரம்-

ஒரு சிலருக்கு அதுல காய்கறிகள் எல்லாமே சேர்த்து சாப்பிடுவதற்கு பிடிக்கும். இந்த ஆம்லெட் வச்சு பிரட் ஆம்லெட் கூட செஞ்சு சாப்பிடுவாங்க ஆனா அதையும் விட இன்னும் நல்ல ஹெவியா இருக்கிற மாதிரி ஒரு சூப்பரான சீஸ் ஆம்லெட் தான் இப்ப பாக்க போறோம். இந்த சீஸ் ஆம்லெட் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். சீஸ் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் நடக்கும் அப்படின்னு சொல்லலாம். இந்த சீஸ்ல கால்சியம் அதிகமா இருக்குறதால சீஸ் சாப்பிடறதால குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் அவங்க எலும்புகள் வலுப்பெறும்.

பற்களும் வலிமை பெறும். இந்த சீஸ அவர்களுக்கு புடிச்ச மாதிரியான ஒரு உணவில் போட்டு கொடுத்தா இன்னுமே விரும்பி சாப்பிடுவாங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரே ஒரு தடவை மட்டும் இந்த சீஸ் ஆம்லெட் செஞ்ச சாப்பிட்டு பாருங்க. அதுக்கப்புறம் நீங்க அடிக்கடி செய்வீங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான டேஸ்டான சீஸ் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
2.67 from 3 votes

சீஸ் ஆம்லெட் | Cheese Omelet Recipe In Tamil

ஒரு சிலருக்கு அதுல காய்கறிகள் எல்லாமே சேர்த்து சாப்பிடுவதற்கு பிடிக்கும். இந்த ஆம்லெட் வச்சு பிரட்ஆம்லெட் கூட செஞ்சு சாப்பிடுவாங்க ஆனா அதையும் விட இன்னும் நல்ல ஹெவியா இருக்கிற மாதிரிஒரு சூப்பரான சீஸ் ஆம்லெட் தான் இப்ப பாக்க போறோம். இந்த சீஸ் ஆம்லெட் குழந்தைகளுக்குரொம்ப ரொம்ப பிடிக்கும். சீஸ் சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய நன்மைகள் நடக்கும் அப்படின்னுசொல்லலாம். இந்த சீஸ்ல கால்சியம் அதிகமா இருக்குறதால சீஸ் சாப்பிடறதால குழந்தைகள் இருந்துபெரியவங்க வரைக்கும் அவங்க எலும்புகள் வலுப்பெறும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner, Snack
Cuisine: tamil nadu
Keyword: cheese omelette
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 6 முட்டை
  • 4 வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 5 ஸ்லைஸ் சீஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • சீஸை நன்கு துருவி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு மிளகு தூள் வெட்டி வைத்துள்ள வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து கலந்து கொள்ளவும்
  • பின்பு ஒரு தோசை கல்லில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அடைத்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் நான்கு வேக வைத்து எடுக்கவும்.
  • பின்பு ஒரு புறத்தில் மட்டும் சீஸை தூவி நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான சீஸ் ஆம்லெட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 2g | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg

இதையும் படியுங்கள் : இரவு உணவுக்கு ஒரு தரம் வெஜ் சீஸ் பாஸ்தா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசி அசத்தலாக இருக்கும்!