சேப்பக்கிழங்கு ரோஸ்ட், சாதத்திற்கு சைடு டிஷ் ஆக மட்டுமில்லாமல் இதனை அப்படியே கூட ஸ்னாக்ஸ் ஆக சாப்பிடலாம் சுவை மிகவும் சூப்பராக இருக்கும்!

- Advertisement -

என்னதான் நம்ம அவியல் துவையல் பொரியல் கூட்டுனு செஞ்சாலும் குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் இந்த மாதிரி ரோஸ்ட் வறுவல் அப்படின்னா ரொம்பவே பிடிக்கும். காரணம் மொறுமொறுப்பாகவும் ரொம்ப சாப்டாவும் இருக்கும். இந்த மாதிரி வறுவல் ரோஸ்ட் எல்லாத்தையும் நம்ம சாம்பார் சாதம் புளி குழம்பு காரக்குழம்பு எல்லாத்துக்கூடையும் வச்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

என் பிரியாணி கூட கூட வச்சு நாம சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் வறுவல் டேஸ்ட் அவ்வளவு பிடிக்கும். அந்த வகையில் நார்மலான வறுவல் ரோஸ்ட் விட கிழங்கு ரோஸ்டு எல்லாருக்கும் பிடிக்கும் இல்லையா? அதனால நம்ம இப்போ சேப்பக்கிழங்கு ரோஸ்ட் தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

- Advertisement -

உருளைக்கிழங்கு சிப்ஸ் செஞ்சுருப்போம் ரோஸ்ட் செஞ்சுருப்போம். சுவைய அட்டகாசமா இருக்கும் ஆனா நிறைய பேர் விரும்ப மாட்டாங்க சுவை வேற லெவல்ல இருக்கும். ரொம்ப வெயிட் கம்மியான பொடிகள் யூஸ் பண்ணி அட்டகாசமான ஒரு சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தான் நம்ம இப்போ செய்யப் போறோம்.

இந்த ரோஸ்ட் எல்லா சாதத்துக்கூடையும் வச்சு சாப்பிட ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியான வறுவல் செய்யாம ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா இந்த சேப்புக்கு கிழங்கு ரோஸ்டர் எளிமையான முறையில செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்பவே புடிக்கும். வாங்க அந்த சேப்பை கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

சேப்பக்கிழங்கு ரோஸ்ட் | Cheppankilangu Roast In Tamil

உருளைக்கிழங்கு சிப்ஸ் செஞ்சுருப்போம் ரோஸ்ட் செஞ்சுருப்போம். சுவைய அட்டகாசமா இருக்கும் ஆனா நிறைய பேர் விரும்ப மாட்டாங்க சுவை வேற லெவல்ல இருக்கும். ரொம்ப வெயிட் கம்மியான பொடிகள் யூஸ் பண்ணி அட்டகாசமான ஒரு சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தான் நம்ம இப்போ செய்யப் போறோம். இந்த ரோஸ்ட் எல்லா சாதத்துக்கூடையும் வச்சு சாப்பிட ஒரு சூப்பரான சைடு டிஷ்ஷா இருக்கும். எப்பவுமே ஒரே மாதிரியான வறுவல் செய்யாம ஒரு தடவை கொஞ்சம் டிஃபரண்டா இந்த சேப்புக்கு கிழங்கு ரோஸ்டர் எளிமையான முறையில செஞ்சு பாருங்க உங்களுக்கு ரொம்பவே புடிக்கும். வாங்க அந்த சேப்பை கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time2 minutes
Active Time3 hours 9 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Cheppankilangu Roast
Yield: 4
Calories: 124kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ சேப்பக்கிழங்கு
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 சிட்டிகை பெருங்காயத் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சேப்பங்கிழங்கை கழுவி சுத்தம் செய்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.சேப்பக்கிழங்கு குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு சேப்பக்கிழங்கின் தோலை உரித்து உங்களுக்கு தேவையான வடிவத்தில் அதனை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
  • அதன் பிறகு வெட்டி வைத்துள்ள பேப்பர் கிழங்கையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
     
  • ஒரு மணி நேரத்திற்கு பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி ஊற வைத்துள்ள சேனைக்கிழங்கை போட்டு மிதமான தீயில் நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
  • இப்பொழுது சுட சுட சூப்பரான சேப்பக்கிழங்கு ரோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 124kcal | Carbohydrates: 298g | Protein: 87g | Sodium: 45mg | Potassium: 212mg