சாதம் சப்பாத்திக்கு ஏற்ற ருசியான செட்டிநாடு ஆலு கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை சாப்பிடும் வகையில் ஒரு ருசியான செட்டிநாடு ஆலு கிரேவி செய்து கொடுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் அளவான காரத்தில் ருசியாக இருக்கும்.

-விளம்பரம்-

கிழங்கு வகைகளிலேயே உருளைக்கிழங்கு அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. அத்தகைய உருளைக்கிழங்கில் எத்தனையோ ரெசிபிக்கள் உள்ளன. அதிலும் குறிப்பாக பலருக்கு உருளைக்கிழங்கை சிப்ஸ் செய்து சாப்பிட பிடிக்கும். சிலருக்கு அதனை பொரியல், வறுவல் என்று செய்து சாப்பிட பிடிக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கை வைத்து எப்படி ஈஸியாக கிரேவி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். இந்த உருளைக்கிழங்கு கிரேவியில் தேங்காய் அரைக்கும் போது, அத்துடன் ஒருசில மசாலா பொருட்களையும் சேர்த்து அரைப்பதால், இந்த கிரேவி சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி சப்பாத்திக்கு மட்டுமின்றி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இப்போது, நாக்கில் எச்சில் ஊர வைக்கும் சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு கிரேவி செய்வது எப்படி என இந்தப் பதிவில் காணலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

செட்டிநாடு ஆலு கிரேவி | Chettinad Aloo Gravy Recipe In Tamil

காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை சாப்பிடும் வகையில் ஒரு ருசியான செட்டிநாடு ஆலு கிரேவி செய்து கொடுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி, பரோட்டாவிற்கு அட்டகாசமாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian
Keyword: Chettinad Aloo Gravy
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 250 கி பேபி உருளைக்கிழங்கு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1/2 கப் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 பட்டை,கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு, இஞ்சி, பூண்டு, மிளகு, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, சேர்த்து வதக்கவும்.
  • பின் சோம்பு, வெந்தயம் சேர்த்து வதக்கவும். இவை பொரிந்த பின் வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி நன்கு வதங்கிய பின் உருளைகிழங்கை சேர்த்து நன்கு கிளறவும்.
  • பின் மிளகாய்த்தூள், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு ஸ்டைல் ஆலு கிரேவி தயார்.

Nutrition

Serving: 350g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 4.6g | Fat: 1.2g | Potassium: 310mg | Fiber: 4g | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 1.5mg

இதனையும் படியுங்கள் : ருசியிலும் வாசத்திலும் அசைவ குழம்பு தோத்து போயிரும் ! அட்டகாசமான சுவையில் காளான் மீல் மேக்கர் கிரேவி!!!