- Advertisement -
செட்டிநாடு சமையல் என்றாலே அதற்கு தனி சுவை உருண்டு. அதுமட்டும் அல்லாமல் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு அவ்வளவு சுவை கொண்டது இந்த செட்டிநாடு சமையல். அந்த வகையில் இன்று செட்டிநாடு சிக்கன் வறுவல்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : ஆட்டுக்கறி சாப்ஸ் இப்படி செய்து பாருங்க! திரும்ப திரும்ப சிக்கன் ரெசிபி செய்வதற்கு இப்படி செய்யுங்கள்!
- Advertisement -
எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்கள், தேவையான பொருட்கள் என அனைத்தையும் நன்கு படித்து பார்த்து நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
செட்டிநாடு சிக்கன் வறுவல் | Chettinad Chicken Fry Recipe In Tamil
செட்டிநாடு சமையல் என்றாலே அதற்கு தனி சுவை உருண்டு. அதுமட்டும் அல்லாமல் அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடுவாங்க. ஏனென்றால் நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு அவ்வளவு சுவை கொண்டது இந்த செட்டிநாடு சமையல். அந்த வகையில் இன்று செட்டிநாடு சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்கள், தேவையான பொருட்கள் என அனைத்தையும் நன்கு படித்து பார்த்து நீங்களும் வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Calories: 295kcal
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ¾ கிலோ சிக்கன்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 தக்காளி நறுக்கியது
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- கருவேப்பிலை கொஞ்சம்
- உப்பு தேவையான அளவு
- 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
அரைப்பதற்கு தேவையானவை:
- 1 ஸ்பூன் சோம்பு
- 2 பட்டை
- 1 அன்னாசி பூ
- 2 ஏலக்காய்
- 3 இலவங்கம்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் வர மல்லி
- 3 வர மிளகாய்
செய்முறை
- முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்தில் வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து அத்துடன் இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி 10 நிமிடம் மூடி போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.
- வேகும் சமையத்தில் ஒரு வானலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அனைத்தையும் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
- 10 நிமிடம் சிக்கன் வெந்ததும் அரைத்துவைத்துல பௌடரை சேர்த்து கருவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும்.
Nutrition
Serving: 650G | Calories: 295kcal | Carbohydrates: 2g | Protein: 31g | Fat: 0.5g | Saturated Fat: 0.2g | Cholesterol: 1mg | Sodium: 3mg | Potassium: 628mg | Sugar: 0.5g