Advertisement
அசைவம்

செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவையும் மணமும் பிரமாதமாக இருக்கும்!!!

Advertisement

சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும். சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப், வெஜ் சூப், மஷ்ரூம் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் செட்டிநாடு சிக்கன் சூப் செய்முறையை காண உள்ளோம். சிக்கனில் சூப் செய்து சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைகிறது.

Advertisement

அதாவது சூப்பில் உள்ள சிக்கனை நீக்கிவிட்டு வெறும் சாற்றினை மட்டும் அருந்த வேண்டும். இவ்வாறு சிக்கன் சூப்பை அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைவதோடு உடலிற்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கிறது. இந்த சிக்கன் சூப்பினை செட்டிநாடு ஸ்டைலில் செய்ய உள்ளதால் இதன் சுவை சற்று தூக்கலாக இருக்கும். இதனை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இதனை செய்யும் போதே வீட்டில் உள்ள அனைவரும் எப்போது அருந்த கொடுப்பீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும்.

செட்டிநாடு சிக்கன் சூப் | Chettinad Chicken Soup Recipe In Tamil

Print Recipe
சூப் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் உணவில் சூப்பை அதிகம் சேர்த்துக் கொள்வது, எதிர்பார்த்த பலனை விரைவில் பெற உதவி புரியும். நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், குறிப்பாக சிக்கன் பிடிக்குமானால், சிக்கனைக் கொண்டு சூப் செய்து குடிக்கலாம். இது மிகவும் ருசியாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும்
Advertisement
கூட. நீங்கள் இதுவரை கடைகளில் தான் சிக்கன் சூப் வாங்கி குடித்துள்ளீர்களா? வீட்டிலேயே சிக்கன் சூப் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான். வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும்.
Course evening
Cuisine Indian, TAMIL
Keyword Chettinad Chicken Soup
Prep Time 15 minutes
Advertisement
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 135

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்

Ingredients

  • 1/4 கி சிக்கன்
  • 1/2 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 1/4 கப் தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 கப் கேரட், பீன்ஸ், கோஸ்
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் சிக்கன், இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, சீரகம், மிளகு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சேர்த்து நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் காய்கறிகள் சற்று வெந்ததும் அதனுடன் சோயா சாஸ், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் வேகவைத்த சிக்கனை இன்னும் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சேர்த்து அதனுடன் சிக்கன் வேக வைத்த தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும்.
  • பின் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான செட்டிநாடு ஸ்டைல் சிக்கன் சூப் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 135kcal | Carbohydrates: 8.8g | Protein: 16.9g | Fat: 4g | Sodium: 149mg | Potassium: 234mg | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 71mg | Iron: 24mg

இதனையும் படியுங்கள் : சுவையான கொங்கு நாட்டு சிக்கன் கிரேவி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 1 ஜூலை 2024!

மேஷம் உடல்நலம் நன்றாக இருக்கும். கடந்த காலங்களில், நீங்கள் முதலீடு செய்த பணத்தின் பலனை இன்று பெறுவீர்கள். இன்று சில…

2 மணி நேரங்கள் ago

தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!

பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டில் குடைமிளகாய் இருந்தால் வாங்கினால் இந்த குடைமிளகாய் மசாலா தோசை செய்து பாருங்கள் அட்டகாசமாக!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

2 நாட்கள் ago

வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில்…

4 நாட்கள் ago

தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன்…

4 நாட்கள் ago

ஜூன் 27 புதன் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு…

5 நாட்கள் ago