Advertisement
அசைவம்

சுவையான செட்டி நாடு மட்டன் கறி இப்படி செய்து பாருங்க!

Advertisement

நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. மட்டன் குழம்பு வகைகளிலே மிகவும் சுவையாக இருப்பதென்றால் அது செட்டிநாடு மட்டன் குழம்பு தான். இந்த குழம்பை பாத்தாலே அனைவர்க்கும் பசி வந்துவிடும். ஏனென்றால் இந்த மனதிற்கு ஈடு வேறு எதிலும் இல்லை.

இந்த செட்டிநாடு குழம்பை பலரும் கடைகளில் தான் சாப்பிட்ருப்பாக, ஆனால் வீட்டில் எப்படி செய்வதென்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

Advertisement

இந்த மட்டன் கறி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் சமைத்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

செட்டிநாடு மட்டன் கறி|Chettinad Mutton Curry Recipe In Tamil

Print Recipe
நீங்கள் அசைவ பிரியர்களா அப்போ உங்களுக்காகவே இந்த ரெசிபி. மட்டன் குழம்பு வகைகளிலே மிகவும் சுவையாக இருப்பதென்றால் அது செட்டிநாடு மட்டன் குழம்பு தான். இந்த குழம்பை பாத்தாலே அனைவர்க்கும் பசி வந்துவிடும். ஏனென்றால் இந்த மனதிற்கு ஈடு வேறு எதிலும் இல்லை.
இந்த செட்டிநாடு குழம்பை பலரும் கடைகளில் தான் சாப்பிட்ருப்பாக, ஆனால் வீட்டில் எப்படி செய்வதென்று தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.
இந்த மட்டன் கறி எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் சமைத்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Advertisement
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword mutton kari, மட்டன் கறி
Prep Time 5 minutes
Cook Time 20 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Ingredients

தேவையான பொருட்கள்:

  • 1 கிலோ மட்டன்
  • 1 துண்டு இஞ்சி
  • 5 பல் பூண்டு
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • ¼ டேபிள் ஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் கடுகு
  • ½ டீஸ்பூன் சோம்பு
  • ½ டீஸ்பூன் சீரகம்
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 ஸ்பூன் மல்லித்தூள்

Instructions

செய்முறை:

  • முதலில் மட்டனை கழுவி, நடுத்தரமான துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  • பிறகு பாதி சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, கிராம்பு, மல்லி, மிளகாய் தூள் அனைத்தையும் மிக்சியில் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
  • பின்பு அரைத்த மசாலாவை மட்டன் துண்டுகள் மீது தடவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
  • அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மசாலா தடவி ஊறவைத்த மட்டன் துண்டுகளை சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து வெடித்ததும், கருவேப்பிலை, மீதி வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். பிறகு வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான செட்டிநாடு மட்டன் கறி தயார்.
Advertisement
swetha

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

5 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

5 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

5 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

6 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

10 மணி நேரங்கள் ago