Advertisement
அசைவம்

சூப்பரான கொத்துக்கறி புலாவ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

Advertisement

சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவககங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்துக்கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது.

அதுபோன்று மட்டன் கொத்துக்கறி புலாவ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும், சுவையாகவும் செய்து விடலாம்.

Advertisement

இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

கொத்துக்கறி புலாவ் | Chicken Keema Pulao Recipe In Tamil

Print Recipe
சிறிய உணவகங்கள் ஆக இருந்தாலும் சரி பெரிய உணவககங்கள் ஆக இருந்தாலும் சரி கொத்துக்கறி இல்லாத அசைவ உணவகத்தை கிராமப்புறங்களில் காணவே முடியாது.
அதுபோன்று மட்டன் கொத்துக்கறி புலாவ் செய்து பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த ரெசிபியை சுலபமாகவும், குறைந்த நேரத்திலும், சுவையாகவும் செய்து விடலாம்.
இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க வீட்டில் உள்ள எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword kothukari pulao, கொத்துக்கறி புலாவ்
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 20 minutes
Total Time 26 minutes
Servings 4 people

Ingredients

தேவையான பொருட்கள்:

  • ½ கிலோ கொத்துக்கறி கறி
  • 2 கப் சாதம்
  • 1 வெங்காயம் நீளமாக நறுக்கியது
  • 1 தேக்கரண்டி இஞ்சி, பூண்டு விழுது
  • 4 பச்சை மிளகாய் நீளமாக நறுக்கவும்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • மிளகாய் தூள் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பிரிஞ்சி இலை
  • 1 பட்டை

Instructions

செய்முறை:

  • முதலில் குக்கரில் கொத்துக்கறியை போட்டு அதனுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  • பிறகு சாதத்தை சிறிது உப்பு போட்டு உதிரியாக வடித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை போட்டு தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம், போட்டு வதக்கவும். அதனுடன் நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய புதினா இலைகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
  • பின்னர் அதனுடன் வேகவைத்த கொத்துக்கறியை சேர்த்து உப்பு தேவைப்பட்டால் போட்டு தண்ணீர் சுண்டும் வரை கிளறவும்.
  • கொத்துக்கறி கலவையுடன் உதிராக வடித்த சாதத்தை சேர்த்து அதனுடன் அதனுடன் சிறிது மிளகாய் தூள், சேர்த்து கிளறி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான கொத்துக்கறி புலாவ் தயார்.
Advertisement
swetha

Recent Posts

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

28 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

3 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

13 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

15 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

15 மணி நேரங்கள் ago

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

16 மணி நேரங்கள் ago