- Advertisement -
கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க தெரியலன்னு சொல்லமாட்டாக ஏனென்றால் இந்த பொடி சேர்த்து சாம்பார் வைத்தால் வாசனையே தனியாக இருக்கும்.
-விளம்பரம்-
எப்படி இந்த பொடி அரைப்பதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
சாம்பார் பொடி | Sambar Podi Recipe In Tamil
கமகமக்கும் செட்டிநாடு சாம்பார் பொடி இனி இது போன்று அரைத்து சாம்பார் வைத்து பாருங்கள் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இனி யாரும் உங்களுக்கு சாம்பார் வைக்க தெரியலன்னு சொல்லமாட்டாக ஏனென்றால் இந்த பொடி சேர்த்து சாம்பார் வைத்தால் வாசனையே தனியாக இருக்கும்.எப்படி இந்த பொடி அரைப்பதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
- ½ கிலோ மிளகாய்
- ¼ கிலோ மல்லி
- 50 கிராம் கடலை பருப்பு
- 50 கிராம் துவரம் பருப்பு
- 50 கிராம் அரிசி
- 4 விரலி மஞ்சள்
- 50 கிராம் சீரகம்
- 50 கிராம் மிளகு
- 2 டீஸ்பூன் சோம்பு
- 25 கிராம் வெந்தயம்
- பெருங்காயம் கோலிக்குண்டு அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் பெருங்காயம் வதங்கும் அளவிற்கு சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை வறுத்துக்கொண்டு, பிறகு மிளகாயைப்போட்டு இளஞ்சூட்டில் வறுக்கவேண்டும்.
- பிறகு எண்ணெய் இல்லாமல் மல்லியை வறுக்கவேண்டும். மஞ்சள் தவிர மீதமுள்ள எல்லாவற்றையும் வறுக்கவேண்டும். மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக்கொள்ளலாம்.