வீடே மணக்க மணக்க ருசியான செட்டிநாடு சைவ மீன் குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

செட்டிநாடு சைவ மீன் குழம்பு இந்த பெயரை கேட்ட உடனே உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். நெத்திலி என்றாலே அசைவம் தானே. இதில் சைவப் பிரியர்களுக்கு நெத்திலி குழம்பா. நெத்திலி சேர்த்தபின் அது எப்படி சைவ குழம்பாக இருக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். ஆனால் இங்கு சைவ நெத்திலி என்று கூறுவது வாழைப்பூவை தான். இந்த பூவை வைத்து தான் நெத்திலி குழம்பு வைக்கும் முறையை செய்யப் போகிறோம். வாழையின் அனைத்து பகுதிகளையும் சமைத்து உண்ணலாம். சத்து நிறைந்துள்ளது. வாழைப் பழம் அப்படியே சாப்பிடலாம். வாழை இலை சாப்பிடப் பயன்படுத்தலாம். வாழைத் தண்டு, வாழைப் பூ பொரியல் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் வாழைப் பூ வைத்து சுவையான குழம்பு செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

-விளம்பரம்-

நீங்க அடிக்கடி வாழைப்பூ வாங்கி சமைப்பீங்களா? எப்பவும் வாழைப்பூ வாங்கினால், அதை வைத்து வடை அல்லது பொரியல் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை வாழைப்பூவை வாங்கினால், செட்டிநாடு ஸ்டைலில் குழம்பு செய்யுங்கள். இந்த செட்டிநாடு வாழைப்பூ குழம்பை, செட்டிநாடு சைவ மீன் குழம்பு என்றும் அழைப்பர். இந்த குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளன. இந்நிலையில் இதில் காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி இருக்கிறது. இந்நிலையில் வெயில் காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரகத்தில் கல் ஏற்படும் இதனால், வாழைப்பூ சாப்பிட்டல் சிறுநீரக கல்லை தடுக்க முடியும்.

- Advertisement -

பொதுவாக வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காயினை குழந்தைகள் சாப்பிட தயக்கம் காட்டுவார்கள். எனவே அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய விதத்தில் இப்படி ‌சமைத்து தந்தால் கப்சிப் என்று சத்தம் மில்லாமல் சாப்பிட்டு முடிப்பார்கள். அடுத்த முறையும் உங்களை இது போல் செய்து தர சொல்லி கேட்பார்கள். இதோட நீங்கள் வைத்து சாப்பிடுவதற்கு, கூட்டு, பொறியல் என எதுவும் தேவையில்லை அப்பளத்தை பொரித்து மதிய உணவை நீங்கள் நிறைவாக சாப்பிட்டு முடிக்கலாம்.

Print
5 from 1 vote

செட்டிநாடு சைவ மீன் குழம்பு | Chettinad Veg Fish Curry Recipe In Tamil

செட்டிநாடு சைவ மீன் குழம்பு இந்த பெயரை கேட்ட உடனே உங்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும். நெத்திலி என்றாலே அசைவம் தானே. இதில் சைவப் பிரியர்களுக்கு நெத்திலி குழம்பா. நெத்திலி சேர்த்தபின் அது எப்படி சைவ குழம்பாக இருக்கும் என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். ஆனால் இங்கு சைவ நெத்திலி என்று கூறுவது வாழைப்பூவை தான். இந்த பூவை வைத்து தான் நெத்திலி குழம்பு வைக்கும் முறையை செய்யப் போகிறோம். வாழையின் அனைத்து பகுதிகளையும் சமைத்து உண்ணலாம். சத்து நிறைந்துள்ளது. வாழைப் பழம் அப்படியே சாப்பிடலாம். வாழை இலை சாப்பிடப் பயன்படுத்தலாம். வாழைத் தண்டு, வாழைப் பூ பொரியல் செய்து சாப்பிடலாம். அந்த வகையில் வாழைப் பூ வைத்து சுவையான குழம்பு செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க. இந்த குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chettinadu Veg Fish Curry
Yield: 4 People
Calories: 89kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 மண் சட்டி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வாழைப்பூ
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 6 பல் பூண்டு
  • 1 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 கப் புளி கரைசல்
  • 1/4 கப் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்

செய்முறை

  • முதலில் வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், மல்லிஇலை, பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
  • பின் சுத்தம் செய்த வாழைப்பூவை இட்லி சட்டியில் போட்டு ஆவியில் வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், வெங்காயம், சோம்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்ததும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி,‌ பச்சை மிளகாய், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் ஆவியில் வேக வைத்த வாழைப்பூவை சேர்த்து கலந்து‌ நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • வாழைப்பூவில் மசாலா நன்கு கலந்து,‌‌ ஒரு‌ கொதி வந்ததும் புளிக் கரைசலை சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • வாழைப்பூ குழம்பு நன்கு கொதித்து கெட்டியானதும், உப்பு சரி பார்த்து இறக்கினால் சைவ மீன்குழம்பு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 89kcal | Carbohydrates: 22.5g | Protein: 47g | Fat: 1.33g | Potassium: 470mg | Fiber: 2.6g | Vitamin C: 8.7mg | Calcium: 5mg | Iron: 18mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான வாழைப்பூ தயிர் வடை‌ இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!