செட்டிநாடு மசாலா வாசனையோடு நாவிற்கு ருசியாக செட்டிநாடு சில்லி இறால் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கடல் உணவுகளில் மீன் விரும்பாதவர்கள் கூட இறால் என்றால் மிகவும் பிடிக்கும். செட்டிநாடு சில்லி இறால் மசாலா இந்த செய்முறை நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது. இந்த செட்டிநாடு உணவுக்கென்றே தனி ருசியும் உண்டு, இறால் மிகவும் சுலபமாக சமைக்கப்படும் உணவு .

-விளம்பரம்-

சில நேரம் மசாலா வாசத்தோடு நாவிற்கு ருசி தரும், வேறு ஏதாவது ருசியில் அசைவம் சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்று மனசு சொல்லும். அந்த சமயத்தில்  இறால் இருந்தால் போதும். அசத்தலான  செட்டிநாடு சில்லி இறால் இந்த செய்முறை நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் . இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.

- Advertisement -

அசத்தலான செட்டிநாடு சில்லி இறால் மசாலா  மிக மிக சுலபமாக தயார் செய்து விடலாம். சுட சுட சாதம், சப்பாத்தி, பூரி, வெரைட்டி ரைஸுக்கு கூட இதை சைடிஷ் ஆக வைத்து அசத்தலாம். வாங்க அந்த செட்டிநாடு சில்லி இறால் மசாலா செய்முறையை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

Print
5 from 1 vote

செட்டிநாடு சில்லி இறால் | Chettinadu Chilli Prawn In Tamil

கடல் உணவுகளில் மீன் விரும்பாதவர்கள் கூட இறால் என்றால் மிகவும் பிடிக்கும். செட்டிநாடு சில்லி இறால் மசாலா இந்த செய்முறை நிச்சயமாக அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இறாலில் அதிக அளவு புரதமும், வைட்டமின் டி-யும் அடங்கியுள்ளது.இந்த செட்டிநாடு உணவுக்கென்றே தனி ருசியும் உண்டு, இறால் மிகவும் சுலபமாக சமைக்கப்படும் உணவு . வாங்க அந்த செட்டிநாடு சில்லி இறால் செய்முறையை எப்படி செய்வது என்று நாமும் தெரிந்து கொள்வோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Chettinadu Chilli Prawn
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • அரை கிலோ இறால்
  • 1 டீதேக்கரண்டி மிளகாய் பொடி
  • 2 தக்காளி
  • 1/4 மஞ்சள் பொடி
  • 1/2  சோம்பு பொடி சோம்பு பொடி
  • 1 டீதேக்கரண்டி இஞ்சி மற்றும் பூண்டு விழுது
  • 2 வெங்காயம்
  • 6 பச்சை மிளகாய்
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 4 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1 1/2 தேக்கரண்டி உப்பு

செய்முறை

  • முதலில் இறாலை தோல் நீக்கி நடுவில் உள்ள குடலை நீக்கி விட்டு சிறிது உப்பு சேர்த்து நன்றாக நான்கு முறை நீர் விட்டு கழுவ வேண்டும்.
  • பிறகு அதனுடன் மஞ்சள் பொடி, அரை டீ தேக்கரண்டி மிளகாய்பொடி சோம்பு பொடி, உப்பு, இஞ்சி மற்றும் பூண்டு விழுது எல்லாம் சேர்த்து பிசறி ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • வெங்காயம், தக்காளியை மெலிதாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாயை சிறிது பெரிய துண்டங்களாக நறுக்க வேண்டும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து பாதி எண்ணை ஊற்றி இறால் கலவையை போட்டு வதக்க வேண்டும். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். நீர் முழுதும் வற்றிய பிறகு இறக்க வேண்டும்.
  • வேறு வாணலியில் மீதமுள்ள எண்ணை ஊற்றி வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
  • நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும். மூன்று நிமிடம் வதக்கியதும் மீதமுள்ள அரை தேக்கரண்டி மிளகாய் பொடி சேர்க்க வேண்டும்..
  • பச்சை வாசனை போனதும் கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு இறால் சேர்த்து, பத்து நிமிடம் கிண்டி இறக்க வேண்டும்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg