அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் செட்டிநாடு இறால் தொக்கு இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இறால் தொக்கு தமிழகத்தில் அசைவப் பிரியர்களால் விரும்பி உண்ணப்படும் ஒரு அசைவ உணவு. இதற்கென இறால் பிரியர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு. அதிலும் குறிப்பாக செட்டிநாடு ஸ்டைல் இறால் தொக்கு என்றால் கேட்கவே தேவையில்லை அதனின் வாசமே வீட்டில் இருப்பவர்களை தானாக கிச்சனுக்கு கூட்டி வந்து விடும். இந்த செட்டிநாடு இறால் தொக்கை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அந்த அளவிற்கு இந்த இறால் தொக்கு சுவையாக இருக்கும். நன்கு காரசாரமான மசாலாவில் ஊறி இருக்கும் இறாலை சுவைப்பதே ஒரு தனி ருசி தான். இறால் தொக்கை பெரும்பாலும் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவோ அல்லது தோசைக்கு சைட் டிஷ் ஆகவோ தான் சுவைக்கபடுகிறது. ஆனால் ரசம் சாதம் மற்றும் இறால் தொக்கு ஒரு அசத்தலான காம்பினேஷன். இதற்கு நிகர் இது தான். மற்ற அசைவ உணவுகளைப் போல இதை சமைப்பதற்கு அதிக நேரம் ஆகாது. இறால் எளிதில் வேகும் தன்மை கொண்டு இருப்பது தான் இதற்கு காரணம். இந்த செட்டிநாடு இறால் தொக்கு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
செட்டிநாடு இறால் தொக்கு | Chettinadu Prawn Thokku Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 250 கி இறால்
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
அரைக்க :
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/2 டீஸ்பூன் மல்லி
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 நட்சத்திர சோம்பு
- 5 வர மிளகாய்
செய்முறை
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து அலசி எடுத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும்.
- மசாலா வாசனை போனதும் தக்காளி சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து வதக்கவும். பின் இறால் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு வேக விடவும்.
- இறால் வெந்து தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் நன்கு பிரட்டி விட்டு கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு இறால் தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கமகமனு ருசியான இறால் முருங்கைக்காய் கிரேவி இப்படி செய்து பாருங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிச்சமாகது!