மொறு மொறுன்னு சிக்கன் 65 இனி இப்படி சுலபமாக இந்த முறையில செஞ்சி பாருங்க! அட்டகாசமான ருசியில் இருக்கும்!

- Advertisement -

சிக்கன் எல்லாராலயும் விரும்பி சாப்பிடக் கூடிய உணவு..என்ன தா நம்ம சிக்கன் கிரேவி, செட்டிநாடு சிக்கன்,பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு னு சிக்கன்ல செய்ற எல்லாத்தையும் விரும்பி சாப்பிட்டாலும் சிக்கன் 65 டேஸ்ட் எதாலையும் அடிச்சுக்க முடியாது அந்த அளவுக்கு சிக்கன் 65 டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்..

-விளம்பரம்-

காரசாரமா மொறு மொறுன்னு சிவப்பு கலர்ல அந்த சிக்கன் 65 பாக்கும்போது எல்லாருக்கும் நாக்குல எச்சில் ஊறும். மட்டன் குழம்பு சாம்பார் பிரியாணி ரசம்னு எல்லா உணவுகள் கூடவே சைடு டிஷ்ஷா வைத்து சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் அதிகமாகவே சாப்பிடுவோம் அந்த அளவுக்கு சிக்கன் 65 பெருமைகள் ஏராளம்னு சொல்லலாம். ஆனால் வீட்ல சிக்கன் 65 செய்யும்போது மசாலா எல்லாம் உதிர்ந்து போய்விடும் அப்படி மசாலா உதிர்ந்து போகாமல் வீட்டிலேயே ஒரு சூப்பர் அருமையான சிக்கன் 65 எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்..

- Advertisement -
Print
3 from 2 votes

சிக்கன் 65 | Chicken 65 Recipe In Tamil

காரசாரமாமொறு மொறுன்னு சிவப்பு கலர்ல அந்த சிக்கன் 65 பாக்கும்போது எல்லாருக்கும் நாக்குல எச்சில் ஊறும். மட்டன் குழம்பு சாம்பார் பிரியாணி ரசம்னு எல்லா உணவுகள் கூடவே சைடு டிஷ்ஷா வைத்துசாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் அதிகமாகவே சாப்பிடுவோம் அந்த அளவுக்கு சிக்கன்65 பெருமைகள் ஏராளம்னு சொல்லலாம். ஆனால் வீட்ல சிக்கன் 65 செய்யும்போது மசாலா எல்லாம் உதிர்ந்து போய்விடும் அப்படி மசாலா உதிர்ந்து போகாமல் வீட்டிலேயே ஒரு சூப்பர் அருமையான சிக்கன் 65 எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்..
Prep Time5 minutes
Active Time1 hour 10 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: chicken 65
Yield: 4
Calories: 13.91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 300 கிராம் எலும்பு இல்லாத சிக்கன்
  • 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 உப்பு உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1 முட்டை
  • எண்ணெய் தேவையான அளவு
  • 4 பச்சை மிளகாய்
  • நறுக்கிய இஞ்சி சிறிதளவு
  • நறுக்கிய பூண்டு சிறிதளவு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சிக்கனை எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள்கரம் மசாலா மிளகு தூள் என அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்
  • ஒரு முட்டையை நன்றாக அடித்து சிக்கனில் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அதில் அரிசி மாவு மற்றும் சோளமாவை சேர்த்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அந்த சிக்கனை அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரையில் நன்றாக ஊற வைக்க வேண்டும்
  • சிக்கன் நன்றாக ஊறிய பிறகு ஒரு கடாயில் தேவையான அளவிற்கு எண்ணெயை ஊற்றி அதில் ஒவ்வொரு துண்டு சிக்கனாகபோட்டு சிக்கன் பொன்னிறமாகும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை அனைத்தையும் தாளித்து அந்த பொறித்த சிக்கனில் சேர்த்தால் வாசமாக இருக்கும்..
  • இப்பொழுது ஒரு அருமையான மொறுமொறுப்பான காரசாரமான சிக்கன் 65 தயார் இதனை நாம் சாம்பார் மட்டன்குழம்பு சிக்கன் குழம்பு என எல்லாவற்றுடனும் வைத்து சாப்பிடலாம்

Nutrition

Serving: 99.93g | Calories: 13.91kcal | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.24g | Vitamin C: 1.24mg | Calcium: 23.13mg | Iron: 0.29mg

இதையும் படியுங்கள் : நாவூறும் காரசாரமான தெலுங்கானா சிக்கன் வறுவல் இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!