ருசியான சிக்கன் சிந்தாமணி இனி இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசை, சாதம் என அனைத்திற்கும் பக்காவாக இருக்கும்!

- Advertisement -

பொதுவாக சிக்கன் என்றாலே குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த சிக்கனை வைத்து நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். அது அனைத்துமே மிகவும் சூப்பராக இருக்கும். சிக்கன் வைத்து செய்யக்கூடியது சிக்கன் பிரியாணி சிக்கன் பெப்பர் ப்ரை, சிக்கன் 65 சிக்கன் மஞ்சூரியன் என இவைகள் எல்லாம் அனைத்து ஊர்களிலுமே செய்யப்படக்கூடிய உணவுகள்.

-விளம்பரம்-

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி சிறப்பும் ஃபேமஸான உணவு இருக்கும். அந்த வகையில் ஈரோடு ஸ்பெஷலான சிக்கன் சிந்தாமணி மிகவும் அருமையாக இருக்கும். பொதுவாக ஈரோடு பக்கம் உள்ளவர்கள் அவர்கள் வீட்டில் சிக்கன் எடுத்தாலே அடிக்கடி இந்த சிக்கன் சிந்தாமணியை செய்து சாப்பிடுவார்கள். நிறைய மசாலாக்கள் போடாமல் குறைவான மசாலாவுடன் மிகவும் குறைவான நேரத்தில் சட்டு என்று செய்யக்கூடிய இந்த சிக்கன் சிந்தாமணி அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

வேறு ஊர்களில் உள்ளவர்களும் இந்த சிக்கன் சிந்தாமணியை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் அதை பக்குவமாக பாரம்பரியமாக எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த சிக்கன் சிந்தாமணியை நாம் வெறும் சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம் சுவை அருமையாக இருக்கும். தயிர் சாதம் போன்ற கலவை சாதனங்களுக்கு இந்த சிக்கன் சிந்தாமணியை வைத்து சாப்பிட்டால் இன்னும் ஒரு தட்டு சாதம் அதிகமாகவே சாப்பிடலாம் அந்த அளவிற்கு மிகவும் ருசியான ஒன்றுதான் இந்த சிக்கன் சிந்தாமணி. இப்ப வாங்க ஈரோடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி எப்படி சீக்கிரத்தில் செய்வது என்று பார்க்கலாம்.

Print
4 from 2 votes

சிக்கன் சிந்தாமணி | Chicken Chinthamani Recipe In Tamil

இந்த சிக்கன் சிந்தாமணியை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் அதை பக்குவமாக பாரம்பரியமாக எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். இந்த சிக்கன் சிந்தாமணியை நாம் வெறும் சாதத்தோடும் பிசைந்து சாப்பிடலாம்சுவை அருமையாக இருக்கும். தயிர் சாதம் போன்ற கலவை சாதனங்களுக்கு இந்த சிக்கன் சிந்தாமணியை வைத்து சாப்பிட்டால் இன்னும் ஒரு தட்டு சாதம் அதிகமாகவே சாப்பிடலாம் அந்த அளவிற்கு மிகவும் ருசியான ஒன்றுதான் இந்த சிக்கன் சிந்தாமணி. இப்ப வாங்க ஈரோடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி எப்படி சீக்கிரத்தில் செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH, starters
Cuisine: tamil nadu
Keyword: Chicken Chinthaamani
Yield: 4

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 13 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலை மற்றும் காய்ந்து மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு அதில் நறுக்கி வைத்துள்ளசின்ன வெங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • இஞ்சி பூண்டு விழுது பச்சைவாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் அதில் கழுவி வைத்துள்ளசிக்கனை சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கனை நன்றாக கிளறிய பிறகுதேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்து அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைக்கவும்.
  • 15 நிமிடங்கள் நன்றாக வெந்தபிறகு தேங்காய் துருவல் சேர்த்து இறக்கினால் சுவையான ஈரோடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணிதயார்.
     

Nutrition

Serving: 500g | Carbohydrates: 13.9g | Protein: 3.49g | Fat: 1.7g | Sodium: 53mg | Potassium: 77mg | Vitamin A: 242IU | Calcium: 13mg | Iron: 25mg

இதனையும் படியுங்கள் : நாவூறும் வித்தியாசமா இளநீர் சிக்கன் ரெசிபி இப்படி செய்து பாருங்கள், அருமையாக இருக்கும்!!!