சுவையான நெய் சிக்கன் வறுவல் செய்வது!

அசைவ உணவு வகைகளில் சிக்கன் மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த நெய் சிக்கன் வறுவல் உணவை ஒரு முறையேனும் சமைத்து, ருசி பார்த்துவிடுங்கள். இதில் நாம் சே

By swetha · 6/1/2022

அசைவ உணவு வகைகளில் சிக்கன் மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த நெய் சிக்கன் வறுவல் உணவை ஒரு முறையேனும் சமைத்து, ருசி பார்த்துவிடுங்கள்.

இதில் நாம் சேர்க்கும் மசாலா கலவை ஒருவரை சாப்பிட தூண்டும் வகையில், நல்ல நிறத்தையும், நறுமணத்தையும் உண்டாக்கும். அதோடு இந்த உணவு சற்று காரம் தூக்கலாகவே இருக்கும்.

சிக்கன் நெய் வறுவல் கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூரில் மிகவும் பிரபலமான ஒன்று. இதை மிகவும் சுலபமாக சமைத்து விடலாம். இதன் காரத்தை மனதில்கொண்டு, பக்க உணவாக எடுத்தால் நல்லது. அதோடு இட்லி மற்றும் தோசைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Recipes AMP · Quick view
View full