Advertisement
சைவம்

சுவையான ரசம் செய்யும் முறை!

Advertisement

ரசம்

Print Recipe
வீட்டிலேயே சுவையான ரசம் செய்ய எளிய, எளிதான செய்முறை. ரசம் நம் அன்றாட உணவு பழக்கத்தில் மிகவும் அடிப்படையான அத்தியாவசியமான உணவாகும். ரசத்தை  சூப்பாகவும் பரிமாறலாம்.
Course Rasam
Cuisine Indian, இந்தியன்
Keyword ரசம்
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Servings 4
Calories 20

Ingredients

ரசம் பொடிக்கு தேவையானவை

  • ¼ டேபிள் ஸ்பூன் வெந்தயம்`
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 சிவப்பு மிளகாய்

ரசம் செய்வதற்கு தேவையானப் பொருட்கள்.

  • 2 tbsp எண்ணெய்
  • 3 தக்காளி
  • 2 சிவப்பு மிளகாய்
  • 2 கப் தண்ணீர்                     
  • தேவைகேற்ப  உப்பு                             
  • சிறிதளவு  புளி                               
  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு                            
  • சிறிதளவு  கருவேப்பிலை
  • ஒரு சிட்டிகை பெருங்காயம்
  • கொஞ்சம் நறுக்கியது கொத்தமல்லி             
  • 4 பூண்டு                          

Instructions

ரசம் பொடி அரைப்பது.

  • ஒரு கடாயில் குறைந்த தீயில் ¼ டேபிள் ஸ்பூன்  வெந்தயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
    ¼ டேபிள் ஸ்பூன் வெந்தயம்`
  • 1/2 டேபிள் ஸ்பூன்  சீரகம் மற்றும் ஒரு  சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.
    ½ டேபிள் ஸ்பூன் சீரகம், 1 சிவப்பு மிளகாய்
  • அவற்றை குளிர்வித்து மிக்சியில் அரைக்கவும். நன்றாக அறைந்த பிறகு அதை ஒரு தனி பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

ரசம் செய்வது.

  • சூடான பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன்  எண்ணெய் சேர்க்கவும்.எண்ணெய் சூடானதும் 1 டேபிள் ஸ்பூன் கடுகு, பாதியாக உடைத்த சிவப்பு மிளகாய் இரண்டு , 1½ டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். 
    Advertisement
    ½ டேபிள் ஸ்பூன் சீரகம், 2 tbsp எண்ணெய், 1 டேபிள் ஸ்பூன் கடுகு                            , 2 சிவப்பு மிளகாய்
  • மூன்று முதல் நான்கு நறுக்கிய பூண்டு, ஒரு துளிர் கருவேப்பிலை மற்றும் ஒரு சிட்டிகை பெருங்காயம் சேர்க்கவும். இலைகள் மிருதுவாக மாறும் வரை நன்றாக வதக்கவும்.
    சிறிதளவு  கருவேப்பிலை, ஒரு சிட்டிகை பெருங்காயம், 4 பூண்டு                          
  • வதங்கிய பின்பு  நறுக்கிய அல்லது பிசைந்த தக்காளியை   அதனுடன் சேர்க்கவும்.  தேவைக்கேற்ப உப்பு மற்றும் அரை ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூலை அதனுடன் சேர்க்கவும்.
    3 தக்காளி, தேவைகேற்ப  உப்பு                             
  • அதன்  பிறகு  அவற்றை மூடி வைத்து வேகவிடவும் அல்லது தக்காளி மென்மையாக மாறும்வரை வதக்கவும்.   
  • பின்னர் நாம் ஏற்கனவே (step 1) அரைத்து வைத்திருக்கும் மசாலா பொடியை இதனுடன் கலக்கவும். அதன் பிறகு இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வதக்கவும். 
  • அதில் இரண்டு முதல் மூன்று கப் அளவிற்கு தண்ணிர் சேர்க்கவும்.
    2 கப் தண்ணீர்                     
  • அதனுடன்  சிறிதளவு புளி தண்ணிர் சேர்க்கவும். குறைவாக இருந்தாலும் சரி ஆனால் புளி தண்ணீரை அதிகமாக சேர்க்க வேண்டாம்.
    சிறிதளவு  புளி                               
  • அவற்றை நன்றாக 5 நிமிடம் கொதிக்கவிடவும். குறைந்த தீயில் கொதிக்க வைத்தால் நல்ல சுவையாக இருக்கும்.
  • கொதித்த பின் அவற்றை சிறிது எடுத்து சுவைப்பார்க்கவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு, புளி  சேர்க்கலாம்.
  • அதில் தண்டுகளுடன் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத்   தூவி விட வேண்டும். 
    கொஞ்சம் நறுக்கியது கொத்தமல்லி             

Nutrition

Calories: 20kcal
Advertisement
swetha

Recent Posts

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

2 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

2 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

3 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

3 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

5 மணி நேரங்கள் ago

அடுத்தமுறை கோதுமை தோசை செய்ய நினைத்தால் இப்படி மிளகு கோதுமை தோசை ட்ரை பண்ணி பாருங்க!

கோதுமை தோசையை வேண்டாம் என்று சொல்கிறார்களா? அப்படின்னா இந்த பொருளை எல்லாம் சேர்த்து பாருங்க, சட்னி கூட தொட்டுக்க வேண்டாம்…

6 மணி நேரங்கள் ago