மதிய உணவுக்கு சுட சுட சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!
கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்
கிழங்கில் உருளைக்கிழங்கு, மரவல்லிக் கிழங்கு, சேனைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு என பல வகையான கிழங்கு .ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான பயனை நமக்கு அளிக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் சர்க்கரை வள்ளிக் கிழங்கு வைத்து ஒரு ரெசிபி பார்க்க உள்ளோம். வழக்கமாக நம்மில் பலரும் இந்த கிழங்கினை அவித்து தான் சாப்பிட்டு இருப்போம்.
ஆனால் இன்று நாம் சர்க்கரை வள்ளி கிழங்கில் சாதம் செய்வது எப்படி என்று காண உள்ளோம். வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த சுவையான சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவுக்கு சுட சுட அப்பள சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!