மதிய உணவுக்கு சுட சுட அப்பள சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

- Advertisement -

அப்பள சாதமா அது என்ன அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கா. இந்த அப்பள சாதம் செய்வது ரொம்பவே ஈஸி. மொரு மொருன்னு அப்பளத்தை கடிச்சுக்கிட்டு சாதத்தை சாப்பிடலாம். அந்த அப்பளத்தோட டேஸ்ட் சாதத்தில் இறங்கி அந்த வாசனையே சூப்பரா இருக்கும். நம்ம நிறைய வெரைட்டி ரைஸ் சாப்பிட்டு இருப்போம் தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் புளி சாதம் தேங்காய் சாதம் மாங்காய் சாதம் யாரும் வீட்ல ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க ஒரே ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க அதுக்கப்புறம் எப்போ சாதம் மீதமானாலும் இந்த அப்பள சாதம்தான் நீங்க செய்வீங்க.

-விளம்பரம்-

நல்லா காரசாரமா இதை சாப்பிடும்போது இதுக்கு சைடிஸ் எதுவுமே தேவைப்படாது. பொதுவாக குழந்தைகளுக்கு அப்பளம் நா ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு நீங்க இந்த அப்பள சாதம் செஞ்சு கொடுத்தா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இந்த அப்பள சாதம் செஞ்ச உடனே சாப்பிடணும் அப்பதான் டேஸ்டா இருக்கும் லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த சாதத்தை கொடுத்து விடக்கூடாது அப்பளம் நமக்கு போய் சாப்பிடவே நல்லா இருக்காது அதனால செஞ்ச உடனே நீங்க இதை சாப்பிட்டு முடிச்சிடனும். ஆனா செஞ்சு வச்சிட்டீங்கன்னா போதும் கண்டிப்பா பத்து நிமிஷத்துல எல்லா சாதமும் காலியாகிடும்.

- Advertisement -

பழைய சாதம் சாப்பிட விரும்பாதவங்க மீந்துபோன சாதத்துல தண்ணீர் ஊத்தாம இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க சாதமும் வீணாக்காத மாதிரி இருக்கும் அதே நேரத்தில் ஒரு சூப்பரான சாப்பாடு சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான அப்பள சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 3 votes

அப்பள சாதம் | Appala Sadham Recipe In Tamil

அப்பள சாதமா அது என்ன அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கா. இந்த அப்பள சாதம் செய்வது ரொம்பவே ஈஸி.மொரு மொருன்னு அப்பளத்தை கடிச்சுக்கிட்டு சாதத்தை சாப்பிடலாம். அந்த அப்பளத்தோட டேஸ்ட்சாதத்தில் இறங்கி அந்த வாசனையே சூப்பரா இருக்கும். நம்ம நிறைய வெரைட்டி ரைஸ் சாப்பிட்டுஇருப்போம் தக்காளி சாதம் தயிர் சாதம் லெமன் சாதம் புளி சாதம் தேங்காய் சாதம் மாங்காய்சாதம் யாரும் வீட்ல ட்ரை பண்ணி இருக்க மாட்டீங்க ஒரே ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்கஅதுக்கப்புறம் எப்போ சாதம் மீதமானாலும் இந்த அப்பள சாதம்தான் நீங்க செய்வீங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Appala Sadham
Yield: 4
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் சாதம்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • 3 அப்பளம்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் அப்பளத்தை சிறிது சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அப்பளத்தை போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
  • பிறகு அதே கடாயில் இருக்கும் எண்ணெயில் கடுகு உளுந்தம் பருப்பு சோம்பு, கருவேப்பிலை பெரிய வெங்காயம் போட்டு நன்றாக தாளித்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அதில் குழம்பு மிளகாய் தூள் சிக்கன் மசாலா மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து நன்றாககலந்து விடவும்
  •  
    தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக எண்ணெயிலேயே அனைத்து மசாலாக்களையும் வதக்கியபிறகு சாதத்தை போட்டு கிளறவும்
  • சாதத்தை நன்றாக கிளறியதும் கொத்தமல்லி இலைகள் பொரித்து வைத்துள்ள அப்பளம் சேர்த்து இறக்கினால் சுவையானஅப்பள சாதம் தயார்

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற ருசியான வெஜ் பிரைடு ரைஸ் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!