- Prep
- 15 min
- Cook
- 30 min
- Serves
- 3
- Cuisine
- Indian, இந்தியன்
- Course
- சிக்கன்
அசைவ உணவு வகைகளில் சிக்கன் மிகவும் முக்கியமான ஒன்று. பெரும்பாலும் வார இறுதி நாட்களில் அசைவ உணவை தான் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவார்கள். அவ்வாறு அசைவ உணவை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த நெய் சிக்கன் வறுவல் உணவை ஒரு முறையேனும் சமைத்து, ருசி பார்த்துவிடுங்கள்.
இதில் நாம் சேர்க்கும் மசாலா கலவை ஒருவரை சாப்பிட தூண்டும் வகையில், நல்ல நிறத்தையும், நறுமணத்தையும் உண்டாக்கும். அதோடு இந்த உணவு சற்று காரம் தூக்கலாகவே இருக்கும்.
சிக்கன் நெய் வறுவல் கர்நாடகாவின் கடலோர நகரமான மங்களூரில் மிகவும் பிரபலமான ஒன்று. இதை மிகவும் சுலபமாக சமைத்து விடலாம். இதன் காரத்தை மனதில்கொண்டு, பக்க உணவாக எடுத்தால் நல்லது. அதோடு இட்லி மற்றும் தோசைக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Ingredients
Method
ஒரு கடாயில் கேஷ்மீர் சிவப்பு மிளகாய், வரமல்லி, மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
வறுத்த பிறகு சிறிது நேரம் ஆறவிடவும், பிறகு அவை அனைத்தையும் மிக்சியில் போடவும். அதனுடன் சிறிய துண்டு இஞ்சி, 4 பல் பூண்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும்.
பின்பு ½ கிலோ சிக்கனில் அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
அதனுடன் ½ கப் தயிர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
மசாலாவை நன்றாக கலந்து பிரிட்ஜில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.
பின்பு ஒரு கடாயில் ¼ கப் நெய் சேர்க்கவும்.
நெய் சூடானதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பெரியவெங்காயத்தை, அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வதங்கிய பிறகு ஊறவைத்த சிக்கனை அதில் சேர்த்து வேகவிடவும் (தண்ணீர் சேர்க்கவேண்டாம்)
வெந்தபிறகு கருவேய்ப்பிலை சிறிதளவு சேர்த்து கிளறவும்.
இப்பொழுது சுவையான நெய் சிக்கன் வறுவல் தயார்.






