சிக்கன் லெக் பீசில் சூப்பரான கால்சி கபாப் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

இன்றைக்கு நம்ம சமைக்க போறது கால்சி கபாப். அது என்ன கால்சி கபாப் என்று நிறைய டவுட் உங்களுக்கு வரலாம் காரணம் என்ன தெரியுமா கால்சி அதாவது சிக்கன் கால்ல பண்ண போறோம் . அதுக்கு நீங்க லெக் பீஸ் எல்லாம் சொல்லிட்டு போயிருக்கலாம் இருந்தாலும் ஏதாவது ஒரு பேர் வித்யாசமா இருக்கணும் இல்லையா அதனால தான் கால்சி கபாப் என்று சொல்ல கூடிய இந்த கபாவை நம்ம செய்ய போறோம்.

-விளம்பரம்-

அது என்ன கால்சி கபாப் அப்படின்னு பாக்குறீங்களா காலு பிளஸ் சிக்கன் சிக்கனோட கால் அதனாலதான் கால்சி கபாப்னு பேரு.இந்த கால்சி கபாபை ரொம்ப ஈஸியா வீட்ல செய்யலாம் அப்படிங்கறதை இந்த பதிவுல பார்க்க இருக்கிறோம். ரொம்பவே ருசியா இருக்கும் குழந்தைகளுக்கு இந்த கால்சி கபாப் அப்படிங்கிறது ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

நம்ம எல்லாருக்குமே நார்மலா சிக்கன் லெக் பீஸ் அப்படிங்கிறது ரொம்பவே பிடிக்கும். அப்படி இருக்கும் போது அந்த லெக் பீஸ் வைத்து காபா பண்ணும் போது இன்னுமே ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. நம்ம பிரியாணியிலே லெக் பீஸ் வேணும் அப்படின்னு ஆசைப்படுவோம்.

அதே  கபாப்லையும் லெக் பீஸ் வேணும் தானே கண்டிப்பா ஆசைப்படுவோம். அப்படிதான் லெக் பீஸ் வச்சு கபாப் பண்ண போறோம். அந்த லெக் பீஸ் கபாப் அதாவது கால்சி கபாப் எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
2.34 from 3 votes

சிக்கன் கால்சி கபாப் | Chicken Legs Kabab Recipe in Tamil

கால்சி கபாப். சிக்கன் கால்ல பண்ண போறோம் . அதுக்கு நீங்க லெக் பீஸ்எல்லாம் சொல்லிட்டு போயிருக்கலாம் இருந்தாலும் ஏதாவது ஒரு பேர் வித்யாசமா இருக்கணும் இல்லையா அதனால தான் கால்சி கபாப் என்று சொல்ல கூடிய இந்த கபாவை நம்ம செய்ய போறோம் கால்சி கபாப் அப்படின்னு பாக்குறீங்களா காலு பிளஸ் சிக்கன் சிக்கனோட கால் அதனாலதான் கால்சி கபாப்னு பேரு.இந்த கால்சி கபாபை ரொம்ப ஈஸியா வீட்ல செய்யலாம் அப்படிங்கறதை இந்த பதிவுல பார்க்க இருக்கிறோம். ரொம்பவே ருசியா இருக்கும் குழந்தைகளுக்கு இந்த கால்சி கபாப் அப்படிங்கிறது ரொம்பவே பிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Chicken Legs Kabab
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன் லெக் பீஸ் 
  • 14 கப் தயிர்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 14 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் சீரகம்
  • 8 முந்திரி 
  • 1/2 ஸ்பூன் ஏலக்காய் பொடி 
  • 14 ஸ்பூன் மிளகு
  • 14 கப் ஃபிரஷ் கிரீம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • சிக்கன் லெக்பீஸை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்து கொள்ளவேண்டும். அதில் இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
  • பின் மஞ்சள் தூள் மற்றும் முந்திரியை மிக்ஸி ஜாரில்  அரைத்து சேர்த்து கொள்ளவும்.
  • அத்துடன் ஏலக்காய் பொடி, மிளகு தூள், சீரகம்,  ஆகியவற்றை சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்துகொள்ளவும்.  இதில் ப்ரஷ் க்ரீம் சேர்த்து பேஸ்ட்போல் கலந்து கொள்ளவும்.
  • சுத்தம் செய்து எடுத்து வைத்துள்ள சிக்கனை இந்த மசாலா கலவையில் பிசறி எடுத்து 8 மணிநேரம் ஃப்ரிட்ஜில்வைக்கவும். 8 மணி நேரம் ஊறிய பிறகு அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றவும்.
  • மசாலா தடவிவைத்த சிக்கனை எடுத்து எண்ணெயில் போட்டு 10 -12 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்துஎடுக்கவும்.
  • சுவையான கால்சி கபாப் தயார்

செய்முறை குறிப்புகள்

கபாப் மேல் எலுமிச்சை சாறு பிழிந்து வெங்காயம் உடன் தொட்டு  சாப்பிட ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Vitamin C: 606mg | Calcium: 24.71mg | Iron: 0.21mg