காரசாரமான ருசியில் சிக்கன் லாலிபாப் இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!

- Advertisement -

சிக்கன்ல நிறைய சைட் டிஷ்ஷ்கள் இருந்தாலும் இதை சிக்கன் லாலிபாப் எல்லாருக்கும் ஒரு விருப்பம் இருந்துகிட்டே தான் இருக்கும். இந்த சுவையான சிக்கன் லாலிபாப் ஹோட்டல்ல சாப்பிடும்போது அவ்வளவு ருசியா இருக்கும். அதே மாதிரி சுவையா இப்போ வீட்ல எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.

-விளம்பரம்-

சுவையான சிக்கன் லாலிபாப் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ஸ்டார்ட்டர்தான் சாப்பிடும்போது நார்மலா சாப்பிட்டு இருப்போம். அதே வீட்ல சாப்பிட்டா இந்த சிக்கன் லாலிபாப் தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் சேர்த்து வச்சு சாப்பிடும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும். லெக் பீஸ் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கும் அது சிக்கன் கால் மாதிரி சேர்த்துக் கொள்வது எல்லாருக்கும் பிடிக்கும். சிக்கன்ல என்ன மாதிரி உணவுகள் செய்தாலும் நம்ம எல்லாருக்குமே பொரிக்கிறது அப்படிங்கிற ஒரு விஷயம் ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

அதனால தான் நம்ம அதிகமா சிக்கன் பிரை பண்ணி சாப்பிடறதும் 65 , வறுவல் மட்டுமில்லாமல் தந்தூரி இது மாதிரி உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் லாலிபாப்பும் எல்லாருக்கும் பிடிக்கிற ஒரு உணவுதான். இந்த சிக்கன் லாலிபாப் ஹோட்டல் ஸ்டைல்ல வீட்ல எப்படி ரொம்ப சூப்பரா சுலபமா செய்யறது அப்படிங்கிறது தான் இந்த பதிவுல பாத்துட்டு இருக்கோம். இந்த சுவையான சிக்கன் லாலிபாப் எல்லாருக்கும் புடிச்ச மாதிரி எப்படி ஈஸியா வீட்டிலேயே செய்யலாம் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

Print
2.67 from 3 votes

சிக்கன் லாலிபாப் | Chicken Lollypop Recipe In Tamil

சுவையான சிக்கன் லாலிபாப் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப புடிச்ச ஒரு ஸ்டார்ட்டர்தான் சாப்பிடும்போது நார்மலாசாப்பிட்டு இருப்போம். அதே வீட்ல சாப்பிட்டா இந்த சிக்கன் லாலிபாப் தயிர் சாதம், ரசம்சாதம், சாம்பார் சாதம் சேர்த்து வச்சு சாப்பிடும்போது அவ்ளோ சூப்பரா இருக்கும். லெக்பீஸ் ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக இருக்கும் அது சிக்கன் கால் மாதிரி சேர்த்துக் கொள்வதுஎல்லாருக்கும் பிடிக்கும். சிக்கன்ல என்ன மாதிரி உணவுகள் செய்தாலும் நம்ம எல்லாருக்குமேபொரிக்கிறது அப்படிங்கிற ஒரு விஷயம் ரொம்பவே பிடிக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Chicken lollipop
Yield: 2
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 4 சிக்கன் கால் அல்லது எலும்போடு சேர்ந்த சிக்கன்
  • 1 டீஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு

லாலிபாப்மேல் பூசுவதற்கு

  • 1 டீஸ்பூன்  சோள மாவு
  • 1 டீஸ்பூன்  மைதா மாவு
  • 1 சிட்டிகை உப்பு
  • 1 சிட்டிகை மிளகு தூள்
  • 2 கப் பிரட் தூள்

பொரிப்பதற்கு

  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை சுத்தம் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் முதலில்  இஞ்சி பூண்டுவிழுது,  மிளகாய்தூள், மிளகுத்தூள் , சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து சிக்கனில்தடவி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • ஒரு சிறிய பாத்திரத்தில் சோளமாவு, மைதாமாவு, மிளகுதூள், உப்பு , தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
  • பின் ஊற வைத்துள்ள சிக்கன் லாலிபாப் மேல் ஸ்பூனால் எடுத்து அனைத்து பக்கமும் படும் படி ஊற்ற வேண்டும்.
  • ஒரு ப்ளேட்டில் பிரட் தூளை கொட்டி அதில்  சிக்கன் லாலிபாப்புகளை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து வைக்கவும்.
  • ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள லாலிபாப்புகளை பொரித்து. எடுக்கவும்.
  • ஒரு பிளேட்டில் சிக்கன் லாலிபாப்புகளை  சூடாக எடுத்து வைத்து தக்காளி சாஸ் உடன் பரிமாறவும். இதோ சூடான சுவையான  சிக்கன் லாலிபாப் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g

இதையும் படியுங்கள் : ருசியான சிக்கன் பீட்சா எளிமையாக நாம் வீட்டிலயே செய்விடலாம்! அவசியம் மிஸ் பண்ணாம இப்படி ட்ரை பண்ணி பாருங்க!