Home அசைவம் சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட ஹோட்டல் தான் போகணும் என்கிற அவசியமே கிடையாது! வீட்டிலேயே சுலபமாக இப்படி...

சிக்கன் நூடுல்ஸ் சாப்பிட ஹோட்டல் தான் போகணும் என்கிற அவசியமே கிடையாது! வீட்டிலேயே சுலபமாக இப்படி செய்து அசத்துங்கள்!

குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிச்ச டிஸ்ல ஒன்னு தான் இந்த நூடுல்ஸ். நூடுல்ஸ் எப்படி இருந்தாலும் பசங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்பலாம் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியவங்களுக்கும் இந்த நூடுல்ஸ் ரொம்பவே பிடிக்க ஆரம்பிச்சுருச்சு. நூடுல்ஸ்ல டக்குனு செய்ற மேகி நூடுல்ஸ் இருந்தாலும், கடைகளில் கிடைக்கிற பெரிய பெரிய நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும்.  

-விளம்பரம்-

வெஜ் நூடுல்ஸ் ,எக் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ், அப்படின்னு ஏராளமான வெரைட்டிஸ் நூடுல்ஸ்ல இருக்கு. குழந்தைகளோட ஆரோக்கியத்தை மனசுல வச்சுட்டு பேரன்ட்ஸ் இப்போ குழந்தைகளுக்கு நூடுல்ஸ் கடைகள்ல வாங்கி கொடுக்காம வீட்லையே செஞ்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில் நம்ம இப்போ சிக்கன் நூடுல்ஸ் கடைகள்ல கிடைக்கிற மாதிரியே வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமான முறையில செய்றதுன்னு பார்க்க போறோம்.

நூடுல்ஸ் நாளே குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இதுல சிக்கன் நூடுல்ஸ் என்றால் சொல்லவா வேணும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஏன்னா சிக்கனும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். ரொம்ப வே சுவையான வீட்லையே செய்யக்கூடிய இந்த சிக்கன் நூடுல்ஸ் எப்படி செய்யறதுன்னு வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

சிக்கன் நூடுல்ஸ் | Chicken Noodles Recipe In Tamil

வெஜ் நூடுல்ஸ், எக் நூடுல்ஸ், சிக்கன் நூடுல்ஸ், அப்படின்னு ஏராளமான வெரைட்டிஸ் நூடுல்ஸ்ல இருக்கு.குழந்தைகளோட ஆரோக்கியத்தை மனசுல வச்சுட்டு பேரன்ட்ஸ் இப்போ குழந்தைகளுக்கு நூடுல்ஸ்கடைகள்ல வாங்கி கொடுக்காம வீட்லையே செஞ்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த வகையில்நம்ம இப்போ சிக்கன் நூடுல்ஸ் கடைகள்ல கிடைக்கிற மாதிரியே வீட்டிலேயே எப்படி ஆரோக்கியமானமுறையில செய்றதுன்னு பார்க்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: chicken noodles
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் சிக்கன்
  • 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
  • 2 பாக்கெட் பெரிய சைஸ் நூடுல்ஸ்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சர்க்கரை
  • 1 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதித்த உடன் பெரிய சைஸ் நூடுல்ஸை அதில் சேர்த்து அரை பதத்திற்கு வேக வைத்துஎடுத்துக் கொள்ள வேண்டும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி நீளமாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.
  • பின்பு வேக வைத்து எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து கிளறவும். சோயா சாஸ் தக்காளி சாஸ் மிளகுத்தூள் உப்பு சேர்த்து லேசாக கிளறியவுடன் நூடுல்ஸ் செய் அதில் சேர்த்துகிளற வேண்டும்.
     
  • இறுதியாக அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சட்டென்று செய்துமுடிக்கக்கூடிய சிக்கன் நூடுல்ஸ் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Fiber: 4g

இதையும் படியுங்கள்: காரசாரமான ருசியில் சிக்கன் லாலிபாப் இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டாம்னே சொல்ல மாட்டாங்க!