Home அசைவம் அடுத்த முறை உங்க வீட்ல சிக்கன் எடுத்தா இந்த மாதிரி ஒரு சூப்பரான சிக்கன் தொக்கு...

அடுத்த முறை உங்க வீட்ல சிக்கன் எடுத்தா இந்த மாதிரி ஒரு சூப்பரான சிக்கன் தொக்கு செஞ்சு பாருங்க!

சிக்கன் அப்படின்னு எழுதி கொடுத்தாலே ஒரு சில பேரு ரொம்ப ஹாப்பியா ஆயிடுவாங்க அந்த அளவுக்கு சிக்கன் தான் உசுர விடுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. சிக்கன் வீட்ல செஞ்சாலும் சரி ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டாலும் சரி எப்படி செஞ்சாலும் சரி சரி ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில நம்ம சிக்கன் வச்சு நிறைய வித்தியாசமான ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்போம்.

-விளம்பரம்-

இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான பரத் அரசு சிக்கன் தொக்கு தான் செய்யப் போறோம் இந்த சிக்கன் தொக்கு நம்ம இட்லி சப்பாத்தி தோசை பூரி அப்படின்னு எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிடலாம் அது கூட இந்த சிக்கன் தொக்க சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டோம் அப்படின்னா பிரியாணி கூட தோத்து போய்டும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். உங்க வீட்ல நீங்க சிக்கன் எடுத்தா எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்வீங்களா அதை செஞ்சு உங்களுக்கு போர் அடிச்சா அப்போ இந்த ரெசிபி உங்களுக்கு தான் இந்த தொக்கு மட்டும் செஞ்சு உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு சாப்பிட கொடுங்க கண்டிப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க அதுக்கப்புறம் நீங்க எப்போ சிக்கன் எடுத்தாலும் இந்த ஒரு தொக்கு தான் செய்வீங்க.

இந்த சிக்கன் தொக்க வெறும் சுடு சாதத்தில் போட்டு பெசஞ்சி சாப்பிட்டா கூட ரொம்பவே அல்டிமேட்டா இருக்கும். அதுமட்டுமில்லாம பழைய சாதத்துக்கு கூட இந்த சிக்கன் தொக்கு அருமையான ஒரு காம்பினேஷன் ஆக இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான சிக்கன் தொக்கு வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4 from 1 vote

சிக்கன் தொக்கு | Chicken Thokku Recipe In Tamil

நம்ம ஒரு சூப்பரான பரத் அரசு சிக்கன் தொக்கு தான் செய்யப்போறோம் இந்த சிக்கன் தொக்கு நம்ம இட்லி சப்பாத்தி தோசை பூரி அப்படின்னு எல்லாத்துக்கும்சைடிஷா வச்சு சாப்பிடலாம் அது கூட இந்த சிக்கன் தொக்க சைட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டோம்அப்படின்னா பிரியாணி கூட தோத்து போய்டும் அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். உங்க வீட்லநீங்க சிக்கன் எடுத்தா எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்வீங்களா அதை செஞ்சு உங்களுக்குபோர் அடிச்சா அப்போ இந்த ரெசிபி உங்களுக்கு தான் இந்த தொக்கு மட்டும் செஞ்சு உங்க வீட்லஇருக்குறவங்களுக்கு சாப்பிட கொடுங்க கண்டிப்பா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time5 minutes
Active Time11 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Chicken Thokku
Yield: 4
Calories: 350kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 2 அன்னாசி பூ
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் பட்டை கிராம்பு அன்னாசி பூ ஏலக்காய் சீரகம் மிளகு சோம்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்த நன்றாக பொன்னிறமாக வதக்கவும்
  • பிறகு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து நன்றாக வேலைக்கு அதனுடன் குழம்பும் மிளகாய்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
     
  • பேசு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக வைக்கவும் நிறைய தண்ணீர்ஊற்றக்கூடாது.
  • சிக்கன் எந்த உடன் அரித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்து இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான சிக்கன் தொக்கு தயார்

Nutrition

Serving: 200g | Calories: 350kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 380mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் சூப்பரான செஸ்வான் சிக்கன் கிரேவி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!