Home சைவம் சில்லி பரோட்டா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

சில்லி பரோட்டா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பரோட்டா பிடிக்காதவங்களை இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே பரோட்டா கூட சால்னா வச்சு சாப்பிடுவதினால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம கொத்து பரோட்டா சில்லி பரோட்டா அப்படின்னு பரோட்டா ல இருக்குற எக்கச்சக்கமான வெரைட்டிசூம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில வீட்டிலேயே ரொம்ப டேஸ்டா கடைகள்ல கிடைக்கிற மாதிரியான ஒரு சில்லி பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம். ஒரு பரோட்டாவோட விலை 10 ரூபாய் 15 ரூபாய் இருந்தாலும் சில்லி பரோட்டா வாங்கினால் கண்டிப்பா 100 ரூபா கேப்பாங்க சில நேரங்கள்ல ஒரு சில கடைகளில் அதை விட அதிகமாக கூட கேட்பாங்க.

-விளம்பரம்-

அதனால நம்ம வீட்லயே செஞ்சுட்டோம் அப்படின்னா எல்லாரும் திருப்தியா சாப்பிடலாம் காசு நமக்கு மிச்சம் ஆகும். அந்த வகையில எல்லாருக்கும் பிடிச்ச மாதிரியான சூப்பர் டேஸ்ட்ல சில்லி பரோட்டா தான் நம்ம செய்ய போறோம். இந்த சில்லி பரோட்டா சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட இந்த மாதிரி குறைவான பொருட்களை வச்சு டேஸ்ட்டான சில்லி பரோட்டா செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டு உங்களை பாராட்டிட்டு தான் போவாங்க.

இந்த சில்லி புரோட்டா சாப்பிடறதுக்கு அப்படியே கடைகளில் கிடைக்கிற மாதிரி சாஃப்டாவும் மொறுமொறுப்பாகவும் இருக்கும். குழந்தைகளுக்கு பொதுவாக கடைகள்ல வாங்கிக் கொடுக்கிறது விட வீட்லையே செஞ்சு கொடுக்கிறது தான் ஆரோக்கியமா இருக்கும் அந்த வகையில் உங்க குழந்தைகளுக்கு வீட்டிலேயே இந்த மாதிரியான முறையில் சில்லி பரோட்டா செஞ்சு கொடுங்க.இப்ப வாங்க இந்த சுவையான சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எப்படி சுலபமான முறையில் செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

சில்லி பரோட்டா | Chill Parotta Recipe In Tamil

பரோட்டா பிடிக்காதவங்களை இருக்க மாட்டாங்க எல்லாருக்குமே பரோட்டா கூட சால்னா வச்சு சாப்பிடுவதினால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுமட்டுமில்லாம கொத்து பரோட்டா சில்லி பரோட்டா அப்படின்னு பரோட்டா ல இருக்குற எக்கச்சக்கமானவெரைட்டிசூம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில வீட்டிலேயே ரொம்ப டேஸ்டா கடைகள்ல கிடைக்கிற மாதிரியான ஒரு சில்லி பரோட்டா எப்படி செய்வது என்று பார்க்கப் போறோம். ஒரு பரோட்டாவோட விலை 10 ரூபாய் 15 ரூபாய் இருந்தாலும் சில்லி பரோட்டா வாங்கினால் கண்டிப்பா 100 ரூபா கேப்பாங்க சில நேரங்கள்ல ஒரு சில கடைகளில் அதை விட அதிகமாக கூட கேட்பாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: dinner, Snack
Cuisine: tamil nadu
Keyword: Chilly Parotta
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 பரோட்டா
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 குடை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
  • 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1/2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு

செய்முறை

  • முதலில் பரட்டோவை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  • பாதி வெந்தவுடன் சில்லி சாஸ், தக்காளி சாஸ்,சோயா சாஸ், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
     
  • சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பிறகு வெட்டி வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான சில்லி பரோட்டா தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 23g | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Vitamin A: 7.9IU | Calcium: 7mg

இதையும் படியுங்க : உடலுக்கு வலு சேர்க்கும் சிறுதானிய பிரண்டை தோசை அருமையான சுவையில் செய்து இப்படி பாருங்கள்!!!