உடலுக்கு வலு சேர்க்கும் சிறுதானிய பிரண்டை தோசை அருமையான சுவையில் செய்து இப்படி பாருங்கள்!!!

- Advertisement -

ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென்னிந்திய குடும்பங்கள் அனைத்தும் எப்போதும் விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது இட்லி, தோசை தான். இருப்பினும் இவற்றை சாதாரணமாக அரிசி மாவில் செய்வதை விட, சற்று வித்தியாசமாகவும், சத்தான முறையிலும் செய்து சாப்பிடலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில் உங்கள் வீட்டில் சிறுதானியங்கள் இருந்தால் அதை வைத்தே சூப்பரான முறையில் தோசைக்கு மாவு தயாரிக்கலாம். காலங்காலமாக சிறுதானியப் பயறுகளை விளைவித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். சிறுதானியங்களில் அளவுக்கதிகமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றில் வகைவகையான சுவையான பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம்.

- Advertisement -

அதில் நாம் இன்று பார்க்க இருப்பது குளிர்காலத்திற்கு உகந்த சுவையான சத்தான சத்தான பிரண்டை சிறுதானிய தோசை. காரமான தேங்காய் சட்னியுடன் சூடாக பிரண்டை தோசையை வைத்து ருசி அலாதியாக இருக்கும். உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. அதிகளவு சத்துக்கள் நிறைந்த தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. சத்துக்கள் நிறைந்த சிறு தானியங்களை கொண்டு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

Print
4 from 1 vote

சிறுதானிய பிரண்டை தோசை | Siruthaniya Pirandai Dosa Recipe In Tamil

ராகி, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம் போன்ற பல சிறுதானியங்கள் உள்ளன. இதனை கொண்டு இட்லி, தோசை, புட்டு போன்ற உணவுகளில் தொடங்கி, குழந்தைகளுக்கு பிடித்தமான கேக், பிரவுனி, பிஸ்கட் போன்ற பேக்கிங் உணவுகள் வரை, அனைத்து விதமான உணவுகளையும் சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கலாம். தென்னிந்திய குடும்பங்கள் அனைத்தும் எப்போதும் விரும்பி சாப்பிடும் டிபன் என்றால் அது இட்லி, தோசை தான். இருப்பினும் இவற்றை சாதாரணமாக அரிசி மாவில் செய்வதை விட, சற்று வித்தியாசமாகவும், சத்தான முறையிலும் செய்து சாப்பிடலாம். காலங்காலமாக சிறுதானியப் பயறுகளை விளைவித்து சாப்பிட்டு ஆரோக்கியமாக நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தனர். சிறுதானியங்களில் அளவுக்கதிகமான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அவற்றில் வகைவகையான சுவையான பதார்த்தங்களை செய்து சாப்பிடலாம். அதில் நாம் இன்று பார்க்க இருப்பது குளிர்காலத்திற்கு உகந்த சுவையான சத்தான சத்தான பிரண்டை சிறுதானிய தோசை.
Prep Time20 minutes
Active Time10 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: Millets Dosa
Yield: 4 People
Calories: 378kcal

Equipment

 • 1 கடாய்
 • 1 பவுள்
 • 1 தோசை கல்
 • 1 கிரைண்டர்

தேவையான பொருட்கள்

 • 1 கப் பிரண்டை
 • 1 கப் இட்லி அரிசி
 • 1/2 கப் ராகி
 • 1/2 கப் சாமை
 • 1/2 கப் வரகு
 • 1/2 கப் கம்பு
 • 1/2 கப் தினை
 • 1/2 கப் சிகப்பு அவல்
 • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
 • 3/4 கப் உளுந்து

செய்முறை

 • முதலில் இட்லி அரிசி, ராகி, தினை, வரகு, சாமை, கம்பு இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நன்கு அலசி விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
 • பின் உளுத்தம்பருப்பு, வெந்தயம் இரண்டையும் காலையில் ஊற வைத்தால் போதும். அவலை மாவு அரைப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன் ஊற வைத்தால் போதும்.
 • அதன்பிறகு பிரண்டையின் ஓரங்களில் உள்ள நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 • இதை கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 • அதன்பிறகு உளுத்தம் பருப்பு, அவல், வெந்தயத்தை நன்றாக அலசி விட்டு கிரைண்டரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
 • பின்பு ஊற வைத்த சிறுதானிய வகைகளை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 • இவை அனைத்தும் ஒன்றாக கலந்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
 • மாவு புளித்ததும் அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் தோசை வார்த்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
 • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான சிறுதானிய தோசை தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 378kcal | Carbohydrates: 7.9g | Protein: 11g | Fat: 4.2g | Saturated Fat: 0.7g | Sodium: 17.2mg | Potassium: 195mg | Fiber: 8.8g | Vitamin C: 285mg | Calcium: 11.5mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட ஆந்திரா ஃபேமஸ் வெள்ளரிகாய் சட்னி இப்படி செஞ்சி பாருங்க!