சிக்கன் வாங்கி இப்படி கூட செய்யலாம் எவ்வளவு செய்தாலும் உடனே காலியாகி விடும்! இதன் ருசியே தனி!

- Advertisement -

அசைவ உணவு பிரியம் உள்ளவர்களில் சிலர் குறிப்பாக சிக்கன் உணவுகளை மட்டும் ருசிப்பதை பழக்கமாக வைத்துள்ளனர். சிக்கன் வகை உணவை பொறித்து, குழம்பு வைத்து , கிரில், தந்தூரி என பல வகைகளிலும் சமைத்து ருசித்து சாப்பிடலாம். உணவுகங்களுக்கு சென்றால் சிக்கன் வகை உணவுகளுக்கென கண் முன்னால் மிகப் பெரிய பட்டியலே காட்டுவார்கள். தினமும் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, பொங்கல் என்று தான் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றோம். என்றாவது ஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளையும் தான் சாப்பிட்டு பார்ப்போமே. 

-விளம்பரம்-

மாடர்ன் உலகில் குழந்தைகள் சற்று வித்தியாசமாக அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படித் தான் சாப்பிடும் உணவுகளையும் சற்று வேறு விதமாக செய்து கொடுத்தால் விருப்பமாக சாப்பிட்டு முடிப்பார்கள். சிக்கனை இப்படி சில்லி சிக்கன், சிக்கன் ஃப்ரை என்று செய்து கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள். உங்களின் சுவை தேடலை நிவர்த்தி செய்வதற்கான ஸ்பெஷல் உணவாக சில்லி சிக்கன் செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

சில்லி சிக்கன் | Chilly Chicken Recipe In Tamil

 
அசைவ உணவு பிரியம் உள்ளவர்களில் சிலர் குறிப்பாக சிக்கன் உணவுகளை மட்டும் ருசிப்பதைபழக்கமாக வைத்துள்ளனர். சிக்கன் வகை உணவை பொறித்து, குழம்பு வைத்து , கிரில், தந்தூரிஎன பல வகைகளிலும் சமைத்து ருசித்து சாப்பிடலாம். உணவுகங்களுக்கு சென்றால் சிக்கன் வகைஉணவுகளுக்கென கண் முன்னால் மிகப் பெரிய பட்டியலே காட்டுவார்கள். தினமும் ஒரே மாதிரியாகஇட்லி, தோசை, பொங்கல் என்று தான் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றோம். என்றாவதுஒருநாள் சற்று வித்தியாசமான உணவுகளையும் தான் சாப்பிட்டு பார்ப்போமே. உங்களின் சுவை தேடலை நிவர்த்தி செய்வதற்கான ஸ்பெஷல் உணவாக சில்லி சிக்கன் செய்வது எப்படிஎனத் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH, Side Dish, starters
Cuisine: tamilnadu
Keyword: Chilly Chicken
Yield: 4
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 2 ஸ்பூன் கான்ப்ளார் மாவு
  • 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகாய்தூள்
  • 2 டேபிள்ஸ்பூன் அரிசிமாவு
  • 2 முட்டை
  • உப்பு தேவைக்கேற்ப
  • எண்ணெய் தேவைக்கேற்ப
  • 3 டேபிள்ஸ்பூன் தயிர்
  • 1/2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை

செய்முறை

  • முதலில் சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • பின்பு கான்ப்ளார் மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், அரிசி மாவு, முட்டை, தயிர், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
  • அதன்பிறகு பிசைந்து வைத்துள்ள மாவுடன் சிக்கனை போட்டு நன்றாக பிரட்டி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு வெந்தவுடன் எடுக்கவும்.
  • அதனுடன்வெங்காயம், மிளகு தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சுவையான சில்லி சிக்கன் ரெடி!

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg