வீட்டில் 5 மூட்டை இருந்தால் போதும் சூப்பரான சில்லி முட்டை இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க டக்குனு காலியாகிடும்!

- Advertisement -

முட்டை யாருக்குத்தான் பிடிக்காது. பெரும்பாலும் நிறைய பேருக்கு முட்டை பிடித்தமானது. ஆனால் வீட்டில் செய்தால் ஒரேமாதிரி யான சுவையில் செய்வது போல இருக்கும், சில்லி முட்டை இருக்க எந்தெந்த பொருட்களை சேர்த்து, எந்த பக்குவத்தில் செய்ய வேண்டும் என்பதை பற்றிய ரெசிபி இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

-விளம்பரம்-

முட்டை வைத்து ஸ்பெஷலான ஒரு சில்லி முட்டை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். முட்டை பொரியல், குழம்பாக செய்து கொடுத்தால் நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் விரும்பி இந்த சில்லி முட்டை சாப்பிடுவார்கள்.

- Advertisement -

இதுவரை மஸ்ரூம் சில்லி, காலிபிளவர் சில்லி, பன்னீர் சில்லி கூட சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டை சில்லி சாப்பிட்டு இருக்கீங்களா. ஒரு முறை உங்களுடைய வீட்டிலேயே உங்கள் கையாலேயே செய்து சாப்பிட்டு பாருங்கள். அத்தனை அசத்தலாக இருக்கும். முட்டை விரும்பாத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த  சில்லி முட்டை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Print
No ratings yet

சில்லி முட்டை | Chilly Egg Recipe In Tamil

முட்டை வைத்து ஸ்பெஷலான ஒரு சில்லி முட்டைதான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போரோம். முட்டை பொரியல், குழம்பாக செய்து கொடுத்தால்நிச்சயமாக வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட மாட்டார்கள். ஆனால் குழந்தைகள் விரும்பி இந்தசில்லி முட்டை சாப்பிடுவார்கள். இதுவரை மஸ்ரூம் சில்லி, காலிபிளவர் சில்லி,பன்னீர் சில்லி கூட சாப்பிட்டு இருப்பீர்கள். முட்டை சில்லி சாப்பிட்டு இருக்கீங்களா.ஒரு முறை உங்களுடைய வீட்டிலேயே உங்கள் கையாலேயே செய்து சாப்பிட்டு பாருங்கள். அத்தனைஅசத்தலாக இருக்கும். முட்டை விரும்பாத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பிவிரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த  சில்லி முட்டை எப்படி செய்வது தெரிந்துகொள்வோம்வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Gravy, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Chilly Egg
Yield: 4
Calories: 123kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 வேக வைத்த முட்டைகள்
  • 2 வெங்காயம்
  • 2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  • 3 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 ஸ்பூன் புளிகரைசல்
  • எண்ணெய் தேவையானஅளவு
  • உப்பு சிறிதளவு
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்த்தூள்
  • 1/2 ஸ்பூன் சர்க்கரை

செய்முறை

  • வேக வைத்த முட்டைகளின் மேல் தோலை எடுத்து விட்டு முள் கரண்டியால் முட்டைகளின் மீது குத்தி விடவும்.
  • வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  • வானலியில் எண்ணெய் ஊற்றி அதில் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் போன்றவற்றை போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
  • பின்பு அதில் மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், புளிகரைசல், உப்பு போட்டு வதக்கவும்
  • அதன் பிறகு அரை கப் கொதி தண்ணீர் ஊற்றி, சர்க்கரை, மஞ்சள்த்தூள், அதில் போடவும். கடைசியாக முட்டைகளை மெதுவாக போடவும்.
  • நன்றாக கெட்டிப்படும் வரை குறைந்த தணலில் வைத்து இறக்கவும். சூடான சில்லி முட்டை ரெடி

Nutrition

Serving: 100g | Calories: 123kcal | Carbohydrates: 45g | Fat: 7.5g | Cholesterol: 93mg | Sodium: 111mg | Potassium: 289mg | Fiber: 6.8g