Home சைவம் பழைய சாதம், சுடு சாதத்துடன் சாப்பிட ருசியான சின்ன வெங்காயத் தொக்கு ஒரு முறை இப்படி...

பழைய சாதம், சுடு சாதத்துடன் சாப்பிட ருசியான சின்ன வெங்காயத் தொக்கு ஒரு முறை இப்படி செய்து பாருங்க!!!

நம்ம சின்ன வெங்காயம், கொஞ்சம் அதிகமா தக்காளி எல்லாம் சேர்த்து தக்காளி தொக்கு செஞ்சு சாப்பிட்டு இருப்போம். அதே மாதிரி சின்ன வெங்காயம் கொஞ்சம் அதிகமா சேர்த்து இப்ப நம்ம சின்ன வெங்காயம் தொக்கு செய்யப் போறோம். இந்த சின்ன வெங்காய தொக்கு சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையான டேஸ்ட்ல இருக்கும். பழைய சாதத்துக்கு இந்த சின்ன வெங்காய தொக்கு வச்சு சாப்பிட்டா டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும்.

-விளம்பரம்-

சுடு கஞ்சி தயிர் சாதம் ரசம் சாதம்னு இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷனா இந்த சின்ன வெங்காய தொக்கு இருக்கும். வீட்ல எந்த ஊரு காய்கறியும் இல்ல அப்படின்னா முன்னாடி நாள் செஞ்ச பழைய சாதம் இருந்தா போதும் அதுக்கு தொட்டு சாப்பிட ஊறுகாய் இல்லனா கூட இந்த சின்ன வெங்காயத் தொக்கு செம காம்பினேஷனா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். இந்த சின்ன வெங்காயத்துக்கு சைடிஷா வைத்து சாப்பிடுவதற்காகவே நம்ம சாதம் நிறைய செஞ்சு பழைய சாதமா வச்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியா இருக்கும்.

அந்த காலத்து பெரியவங்களுக்கு எல்லாம் இந்த காம்பினேஷன் ரொம்பவே பிடிக்கும் ஆனால் பெரியவங்க மட்டும் இல்லாம இப்ப நான் சின்ன குழந்தைகளும் இந்த மாதிரி பழைய கஞ்சியை விரும்பி தான் சாப்பிடுகிறார்கள் அதனால் அவர்களுக்கு மேல் இந்த பழைய கஞ்சி கூட சின்ன வெங்காயத்துக்கு செஞ்சு கொடுத்தீங்கன்னா போதும் காலையில காலை உணவா சாப்பிட்டால் ரொம்பவே அருமையா இருக்கும்.

அதுமட்டுமில்லாம இந்த சின்ன வெங்காய தொக்கு சப்பாத்தி கூட கூட நீங்க வச்சு சாப்பிடலாம் அதுவும் டேஸ்ட்டா தான் இருக்கும். இட்லி தோசை வெறும் சாதத்தில் கூட பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். தொக்கு செய்வதற்கு ரொம்ப நேரம் எல்லாம் தேவைப்படாது கம்மியான நேரத்திலேயே ரொம்பவே அருமையான டேஸ்ட்ல இந்த சின்ன வெங்காய தொக்கு சூப்பரா செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த அருமையான சின்ன வெங்காய தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 2 votes

சின்ன வெங்காயத் தொக்கு | Chinna Vengaya Thokku Recipe In Tamil

சின்ன வெங்காய தொக்கு சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையானடேஸ்ட்ல இருக்கும்.சுடு கஞ்சிதயிர் சாதம் ரசம் சாதம்னு இது எல்லாத்துக்கும் ஒரு சூப்பரான காமினேஷனா இந்த சின்ன வெங்காயதொக்கு இருக்கும். வீட்ல எந்த ஊரு காய்கறியும் இல்ல அப்படின்னா முன்னாடி நாள் செஞ்சபழைய சாதம் இருந்தா போதும் அதுக்கு தொட்டு சாப்பிட ஊறுகாய் இல்லனா கூட இந்த சின்ன வெங்காயத்தொக்கு செம காம்பினேஷனா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். இந்த சின்ன வெங்காயத்துக்குசைடிஷா வைத்து சாப்பிடுவதற்காகவே நம்ம சாதம் நிறைய செஞ்சு பழைய சாதமா வச்சு சாப்பிடலாம்அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Appetizer, Breakfast, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Chinna Vengaaya Thokku
Yield: 4
Calories: 217kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 3 நறுக்கிய பூண்டு
  • 1/2 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்த்து மசிய வதக்கிக் கொள்ளவும்.
  •  
    பிறகு அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி தொக்கு பதத்திற்குவந்தவுடன் அடுப்பை அணைத்தால் சுவையான சின்ன வெங்காய தொக்கு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 217kcal | Carbohydrates: 56g | Protein: 18g | Cholesterol: 10mg

இதையும் படியுங்கள் : ருசியான நெய் மீன் கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

-விளம்பரம்-