- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன், மீன், முட்டை, கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு புட்டு, கருவாடு மசாலா என்று பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம். வேறு எதையும் தேட மாட்டார்கள். அதன் மணமும் சுவையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். அதனை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும். கருவாட்டில் பல வகைகள் இருக்கின்றன. கருவாடில் அயிரை கருவாடு, நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, நகரை கருவாடு என்று இன்னும் இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
அந்த வகையில் இன்று நாம் பலரும் விரும்பி சாப்பிடும் நெய் மீன் கருவாடு வைத்து செய்யும் தொக்கு எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதனை செய்யும் போது வீடே கமகமக்கும். இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும். நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். வாருங்கள்! வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!
Ingredients
Method
முதலில் கருவாட்டை நன்கு தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு சேர்த்து பொரிய விடவும்.
பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து கிளறவும்.
பின் தக்காளி சேர்த்து நன்கு மசிய வதக்கவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் ஊற வைத்த கருவாட்டை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கருவாடு நன்கு வெந்து வரும் வரை வதக்கி விடவும்.
தண்ணீர் நன்கு சுண்டி கருவாடு வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான நெய் மீன் கருவாடு தொக்கு தயார்.






