மதிய உணவுக்கு சுவ சுட சாதத்துடன் ஊற்றி சாப்பிட ருசியான சௌ சௌ குழம்பு இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

பொதுவாக காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் காய்கறிகளில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய காய்கறியாக சௌ சௌ பார்க்கப்படுகின்றது. நீர் சத்து நிறைந்துள்ள சௌசௌ ரொம்ப சுவையானதொரு காய்கறி வகையாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இவை ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது.

-விளம்பரம்-

குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை உள்ளவர்கள் சௌசௌவை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. சௌ சௌ வைத்து எப்போதும்போல சாம்பார், கூட்டு தான் வைக்கணுமா. கொஞ்சம் வித்தியாசமான வேறு ஏதாவது ரெசிபி இருக்குதா. ‌அப்படின்னு நெனச்சா உங்களுக்கு இது ஒரு பெஸ்ட் ரெசிபி. இந்த மசாலா பொருட்களை அரைத்து குழம்பு வைத்தால், இதோட வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.

- Advertisement -

சௌசௌ குழம்பு கெட்டியாக இருக்கும் என்பதால் இட்லி, தோசைக்கு கூட சைட் டிஷ் ஆக தொட்டுக் கொள்ளலாம். அல்லது சாதத்திற்கு குழம்பாகவும் ஊற்றி பிசைந்து சாப்பிடலாம். சௌசௌ, சுரைக்காய், புடலங்காய் போன்ற தண்ணீர் காய்கறிகளை நாம் விரும்பி சாப்பிடுவதில்லை. குழந்தைகளுக்கும் இந்த தண்ணீர் காய்கறிகளுக்கு அவ்வளவாக விருப்பம் இல்லை. ஆனால் சௌசௌவை வைத்து இப்படியொரு சுவையான குழம்பு செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

சௌ சௌ குழம்பு | Chow Chow Kulambu Recipe In Tamil

பொதுவாக காய்கறிகளை பயன்படுத்தி பல வகையான உணவுகளை தயார் செய்யலாம். அந்த வகையில் காய்கறிகளில் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய காய்கறியாக சௌ சௌ பார்க்கப்படுகின்றது. நீர் சத்து நிறைந்துள்ள சௌசௌ ரொம்ப சுவையானதொரு காய்கறி வகையாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர்கடுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும். இவை ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. குறிப்பாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவை உள்ளவர்கள் சௌசௌவை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது. சௌ சௌ வைத்து எப்போதும்போல சாம்பார், கூட்டு தான் வைக்கணுமா. கொஞ்சம் வித்தியாசமான வேறு ஏதாவது ரெசிபி இருக்குதா. ‌அப்படின்னு நெனச்சா உங்களுக்கு இது ஒரு பெஸ்ட் ரெசிபி. இந்த மசாலா பொருட்களை அரைத்து குழம்பு வைத்தால், இதோட வாசம் பக்கத்து வீட்டு வரைக்கும் வீசும்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Chow chow curry
Yield: 4 People
Calories: 75kcal

Equipment

 • 1 மிக்ஸி
 • 1 பவுள்
 • 1 கடாய்

தேவையான பொருட்கள்

 • 2 சௌ சௌ

அரைக்க

 • 1 கப் சின்ன வெங்காயம்
 • 2 தக்காளி
 • 5 வர ‌மிளகாய்
 • 1 டீஸ்பூன் மல்லி
 • 1 டீஸ்பூன் சீரகம்
 • 1/2 டீஸ்பூன் சோம்பு தூள்
 • 1 டீஸ்பூன் கசகசா
 • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
 • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • உப்பு தேவையான அளவு

தாளிக்க

 • எண்ணெய் தேவையான அளவு
 • 1/4 டீஸ்பூன் கடுகு
 • 4 சின்ன வெங்காயம்
 • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

 • முதலில் சௌசௌ வை தோல் நீக்கி நன்கு கழுவி விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ளவும்.
 • இவை சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
 • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கிய சௌசௌவை சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் மற்றும் ‌உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
 • பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை வேகும் காயில் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
 • அதன்பிறகு மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வரை மூடி கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
 • பின்னர் ஒரு தாளிப்பு கடாயில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும்.
 • அவ்வளவுதான் சுவையான சௌசௌ குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 75kcal | Carbohydrates: 6g | Protein: 7.1g | Fat: 4.2g | Sodium: 480mg | Potassium: 40mg | Fiber: 5.2g | Sugar: 2.2g | Vitamin A: 45IU | Vitamin C: 80mg | Calcium: 10mg | Iron: 3.1mg

இதனையும் படியுங்கள் : கேரட் மற்றும் சௌசௌ சேர்த்து கல்யாண வீட்டு கூட்டு இப்படி சுலபமாக செஞ்சி பாருங்க!