- Advertisement -
இந்த பதிவில், நாம தக்காளி இல்லாம ஒரு சட்னி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கிறதுனால இந்த சட்னிக்கு தனி சுவை கிடைக்கும். இந்த சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் எல்லா டிபனுக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். கண்டிப்பா இந்த சட்னியை சூடான இட்லி கூட வச்சு சாப்பிட்டீங்கன்னா எல்லாருமே ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க . நீங்களும் ட்ரை பண்ணி பாத்துட்டு உங்களுக்கு இந்த ரெசிபி எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
- Advertisement -
தக்காளி இல்லாத சட்னி | Chutney without Tomato In Tamil
இந்த பதிவில், நாம தக்காளி இல்லாம ஒரு சட்னி தான் பார்க்க போகிறோம். இந்த சட்னியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கிறதுனால இந்த சட்னிக்கு தனி சுவை கிடைக்கும். இந்த சட்னி இட்லி, தோசை, ஊத்தாப்பம் எல்லா டிபனுக்கும் தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். கண்டிப்பா இந்த சட்னியை சூடான இட்லி கூட வச்சு சாப்பிட்டீங்கன்னா எல்லாருமே ரெண்டு இட்லி கூட சேர்த்து சாப்பிடுவாங்க . நீங்களும் ட்ரை பண்ணி பாத்துட்டு உங்களுக்கு இந்த ரெசிபி எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Calories: 134kcal
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 6 வரமிளகாய்
- 1 cup சின்ன வெங்காயம்
- 1 பூண்டு பெரியது
- கறிவேப்பிலை சிறுது
- புளி நெல்லிக்காய் அளவு
- கொத்தமல்லி சிறுது
- உப்பு தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஸ்டவ்வில் கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் காய்ந்தவுடன். அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். பின்பு அதில் வரமிளகாய் சேர்க்கவும்.
- பின்பு உரித்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்,வெங்காயம் வதங்குவதற்காக சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும் .ஒரு பெரிய பல் பூண்டை உரித்து சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு வதங்கியவுடன் சிறிது கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ளவும்.
- கொத்தமல்லி,சிறிது புளி சேர்த்துக் கொள்ளவும், பின்பு பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்.நன்கு வதங்கியவுடன் அடுப்பை அணைத்து இறக்கி விடவும் . நன்கு ஆரிய உடன் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.இறுதியில் சட்டினியில் கடுகு,சீரகம் தாளித்து சூடான இட்லி, தோசையுடன் பரிமாறவும்.
செய்முறை வீடியோ
Nutrition
Serving: 50g | Calories: 134kcal | Carbohydrates: 59.6g | Protein: 24g | Calcium: 14mg | Iron: 3.8mg