தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தினமும் செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு ரொம்பவே எளிதாக செய்யக் கூடிய இந்த சட்னி அதிகம் பிடித்து போய்விடும். இந்த சட்னி தக்காளி சேர்க்காத ரொம்ப சுவாரஸ்யமான ஒரு சட்னி. நல்லா சுட சுட இட்லியோட இந்த சட்னி சாப்பிட்டா!, கூட இன்னும் ஒரு இட்லி சேர்த்து சாப்பிடணும்னு தோணும். அந்த அளவுக்கு ரொம்ப சுவையோடு இருக்கும் . அதெல்லாம் விட இது ரொம்ப சுலபமான ரெசிபி. வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் .
-விளம்பரம்-
தக்காளி இல்லாத சட்னி | Chutney without tomato
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று தினமும் செய்து சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு ரொம்பவே எளிதாக செய்யக் கூடிய இந்த சட்னி அதிகம் பிடித்து போய்விடும். இந்த சட்னி தக்காளி சேர்க்காத ரொம்ப சுவாரஸ்யமான ஒரு சட்னி. நல்லா சுட சுட இட்லியோட இந்த சட்னி சாப்பிட்டா!, கூட இன்னும் ஒரு இட்லி சேர்த்து சாப்பிடணும்னு தோணும். அந்த அளவுக்கு ரொம்ப சுவையோடு இருக்கும் . அதெல்லாம் விட இது ரொம்ப சுலபமான ரெசிபி.வாங்க இந்த ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம் .
Yield: 4
Calories: 217kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 சின்ன வெங்காயம்
- பூண்டு பூண்டு
- 1 கொத்து கறிவேப்பிலை
- புளி சிறுது
- 2 ஸ்பூன் பொட்டுக்கடலை
- 1/4 கப் தேங்காய்
- 3 கொத்து கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- முதலில் ஸ்டவ்வில் கடாய் வைத்து, கடாய் சூடானதும். எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
- ஒரு நிமிடம் நன்கு வறுத்து விட்டு மிளகாயை வெளியே எடுத்து தனியே வைத்து விடலாம். அதே எண்ணெயில் 150 கிராம் அளவுக்கு சின்ன வெங்காயம் சேர்த்துப் 4 பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும் .
- பூண்டு, சின்ன வெங்காயம் இரண்டும் நன்கு நிறம் மாறும் வரை வதக்கவும். பின்பு ஒரு கொத்து கறிவேப்பிலை, புளி சேர்த்துக் கொள்ளவேண்டும். கொத்தமல்லி சிறது சேர்க்கவும்.
- பின்னர் பொட்டுக்கடலை துருவிய தேங்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு ஸ்டவிலிருந்து இறக்கி நன்கு ஆறியவுடன் . அரைத்து கிண்ணத்தில் மாற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சுட சுட இட்லி ,தோசையுடன் பரிமாறவும்.
Nutrition
Serving: 100g | Calories: 217kcal | Protein: 3.62g | Fat: 19.84g | Sodium: 11.13mg | Potassium: 156mg | Fiber: 4.64g | Calcium: 44.29mg | Iron: 1.14mg