ஸ்வீட்ஸ் சாப்பிட நினைத்தால் தித்திக்கும் சுவையில் தேங்காய் பர்ஃபி வீட்டிலயே இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் தேங்காய் வைத்து மிகவும் சுவையான ஆரோக்கியமான தேங்காய் பர்ஃபி சுலபமாக எப்படி செய்வது என்பதைப் பற்றி த்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பர்ஃபி செய்ய தேங்காய் , சர்க்கரை , நெய் போன்ற சில பொருட்கள் மட்டுமே போதும்.

-விளம்பரம்-

எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் தேங்காய் பர்பியும் கட்டாயம் இருக்கும். சுவையான தேங்காய் பர்பியை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாக செய்ய முடியும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான இந்த தேங்காய் பர்பி ரொம்ப ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு தான், இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம்.

- Advertisement -

இதற்கு நிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் தேங்காய் பர்பி செய்து முடித்துவிடலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

தேங்காய் பர்ஃபி | Coconut Burfi Recipe In Tamil

எல்லாருக்கும் பிடித்த இனிப்பு வகைகளில் தேங்காய்பர்பியும் கட்டாயம் இருக்கும். சுவையான தேங்காய் பர்பியை, நம்முடைய வீட்டிலேயே சுலபமாகசெய்ய முடியும். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்தமான இந்த தேங்காய் பர்பிரொம்ப ரொம்ப சுலபமா எப்படி செய்யறதுன்னு தான், இந்த பதிவில் தெரிஞ்சுக்க போறோம். இதற்குநிறைய பொருட்கள் கூட தேவையில்லை. சிரமமும் கிடையாது. மொத்தமாக 15 நிமிடத்தில் தேங்காய்பர்பி செய்து முடித்துவிடலாம்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Coconut Burfi
Yield: 4
Calories: 263kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் மெல்லியதாக துருவிய தேங்காய் துருவல்
  • 1 கப் சர்க்கரை
  • ஏலக்காய்
  • நெய் சிறிது
  • முந்திரி (விரும்பினால்) தேவைக்கு

செய்முறை

  • தேங்காய் துருவலின் வெண்மையான பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு தட்டில் நெய் தடவி வைக்கவும்.
  • அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையும், தேங்காய் துருவலையும் சேர்த்து கொட்டி சிறுந்தீயில் வைக்கவும். மெதுவாக கிளறி விடவும்.
  • சிறிது நேரத்தில் சர்க்கரை கரைந்து கெட்டியான கலவையாகும். பின் நீர்த்து, சில நிமிடங்களில் ஓரங்களில் நுரைக்க துவங்கும். கைவிடாமல் மிதமான தீயில் கிளறி விடவும். சிறிது நேரத்தில் கலவை முழுவதும் நுரைப்பது போல் வந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும்.
  • இப்போது ஏலக்காய் சேர்க்கவும். தேங்காயின் வெண்மை மாறாமல் இருக்க வேண்டும். இப்போது முந்திரி சேர்க்க விரும்பினால் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.நெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.
  • லேசாக சூடு இருக்கும் போதே துண்டுகளாக்க கத்தியால் கோடிடவும்.ஆறிய பின் துண்டுகளாக்கவும்.
  • சுவையான சுலபமான தேங்காய் பர்ஃபி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg