- Advertisement -
சுவையான தேங்காய் கறிவடகத் துவையல் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய் கறிவடகத் துவையல் , ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக 10 நிமிடத்தில் எப்படி டேஸ்டியான பாரம்பரிய முறையில் தேங்காய் கறிவடகத் துவையல் அரைப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
-விளம்பரம்-
தேங்காய் கறிவடகத் துவையல் | Coconut Karivadagam Thuvayal
சுவையான தேங்காய் கறிவடகத் துவையல் இப்படி ஒரு முறை செஞ்சு கொடுத்தால் இனி தொட்டுக்க வேறு எதுவுமே கேட்க மாட்டாங்க! எல்லா வகையான கலவை சாதம வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கக்கூடிய இந்த தேங்காய்கறிவடகத் துவையல் , ஒவ்வொரு பொருட்களாக வறுத்து செய்யப் போகிறோம். ரொம்பவும் ஈஸியாக 10 நிமிடத்தில் எப்படி டேஸ்டியான பாரம்பரிய முறையில் தேங்காய் கறிவடகத் துவையல் அரைப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Yield: 4
Calories: 217kcal
Equipment
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 மூடி தேங்காய் துருவிக் கொள்ளவும்
- 4 பச்சை மிளகாய்
- 1 சுளை புளி
- உப்பு தேவைக்கேற்ப
- 2 வறுத்த கறிவடகம்
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- 1/2 தேக்கரண்டி கடுகு
- 1/2 உளுத்தம்பருப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
செய்முறை
- தேங்காய்,புளி, உப்பு, மிளகாய் ஆகியவற்றை வதக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைக்கவும். அதில் வறுத்த கறிவடகத்தைச் சேர்த்து அரைக்கவும்.
- எடுப்பதற்கு முன், வாணலியில் எண்ணையைச் சுடவைத்து அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் பொரித்து, அரைத்த விழுதில் கொட்டி இவற்றையும் சேர்த்து சற்று கொரகொரவென அரைத்தெடுக்கவும்.
- வடக வாசனை தூக்கலாக இருக்கும் இந்தத் துவையல், கட்டுச்சாதத்துக்கு ஏற்றதாகும். அம்மியில்அரைத்தால் ருசி இன்னும் கூடும்.
Nutrition
Serving: 100g | Calories: 217kcal | Carbohydrates: 6.41g | Protein: 3.62g | Fat: 19.84g | Sodium: 11.13mg | Potassium: 156mg | Fiber: 4.76g | Calcium: 33.29mg | Iron: 1.14mg
- Advertisement -