எப்பவும் ஒரே மாதிரியான பாயாசம் சாப்பிட்டு போர் அடிக்குதா அப்படினா ருசியான தேங்காய் பால் பாயாசம் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

- Advertisement -

ஜவ்வரிசி பாயாசம் பாசிப்பருப்பு பாயாசம் இளநீர் பாயாசம் சேமியா பாயாசம் என‌ நாம் நிறைய வகையான பாயாசம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமான தேங்காய் பாயசம் செய்ய போகிறோம். அரிசியும் தேங்காய் பாலும் சேர்த்து செய்யப் போகின்ற இந்த தேங்காய் பால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். நம் வீட்டில் ஒரு வேளை சேமியா ஜவ்வரிசி பாசிப்பருப்பு எதுவுமே இல்லை என்றால் சட்டென்று நம்மால் இந்த பாயசத்தை செய்ய முடியும்.

-விளம்பரம்-

இதற்கு தேவைப்படும் எல்லா பொருட்களுமே நம் வீட்டில் உள்ள பொருட்கள் தான். நம் வீட்டில் என்ன விசேஷங்கள் வந்தாலும் நாம் செய்கின்ற இரண்டு முக்கியமான இணைப்பு என்றால் கேசரி மற்றும் பாயாசம் தான். இதில் எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ளவர்களும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். மிகவும் சுவையாக இருக்கும் இந்த பாயாசம் செய்வதற்கு மிகவும் அதிகமான நேரம் தேவைப்படாது. சட்டென்று செய்துவிடலாம்.

- Advertisement -

நவராத்திரி பண்டிகைகள் வரும்பொழுது இந்த தேங்காய் பால் பாயசத்தை செய்து நெய்வேதியமாக படைக்கலாம். மிகவும் விசேஷமானது. வயிறு எரிச்சல் வாய் புண் வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கும் நாம் இந்த தேங்காய் பால் பாயசம் செய்து குடிக்கலாம். சுவையோடு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான தேங்காய் பால் பாயசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

தேங்காய் பால் பாயாசம் | Coconut Milk Payasam In Tamil

ஜவ்வரிசி பாயாசம் பாசிப்பருப்பு பாயாசம் இளநீர் பாயாசம்சேமியா பாயாசம் என‌ நாம் நிறைய வகையான பாயாசம் சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம்கொஞ்சம் வித்தியாசமான தேங்காய் பாயசம் செய்ய போகிறோம். அரிசியும் தேங்காய் பாலும் சேர்த்துசெய்யப் போகின்ற இந்த தேங்காய் பால் பாயசம் மிகவும் சுவையாக இருக்கும். நம் வீட்டில்ஒரு வேளை சேமியா ஜவ்வரிசி பாசிப்பருப்பு எதுவுமே இல்லை என்றால் சட்டென்று நம்மால் இந்தபாயசத்தை செய்ய முடியும்.நவராத்திரி பண்டிகைகள் வரும்பொழுது இந்த தேங்காய் பால்பாயசத்தை செய்து நெய்வேதியமாக படைக்கலாம். மிகவும் விசேஷமானது. வயிறு எரிச்சல் வாய்புண் வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளுக்கும் நாம் இந்த தேங்காய் பால் பாயசம் செய்துகுடிக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Coconut Milk Payasam
Yield: 4
Calories: 85kcal

Equipment

  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 தேங்காய்
  • 1/4 கப் பச்சரிசி
  • 1 கப் வெல்லம்
  • 1 சிட்டிகை சுக்கு பொடி
  • 2 டேபிள்ஸ்பூன் நெய்
  • 7 முந்திரி பருப்பு
  • 8 உலர்ந்த திராட்சை
  • 1 சிட்டிகை பச்சைக் கற்பூரம்

செய்முறை

  • தேங்காயை துருவி, அரைத்த முதல் பால் இரண்டாம் பால் என தனி தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.எடுத்து வைத்துள்ள இரண்டாம் பாலில் பச்சரிசியில் போட்டு அரைமணி நேரம் ஊற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு தேங்காய் பாலுடன் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  •  
    இனி கனமான பாத்திரத்தில் நெய் சேர்த்து முந்திரி திராட்சையை பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அதை பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பால் பச்சரிசி விழுது முதல் தேங்காய் பால்தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
     
  • மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைந்ததும் அதனை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
  • நன்றாக ஒரு பத்து நிமிடங்கள் கொதித்த உடன் சுக்கு பொடி வறுத்து வைத்துள்ள முந்திரி திராட்சை அனைத்தையும்சேர்த்து இறுதியாக பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கினால் சுவையான தேங்காய் பால் பாயசம்தயார்

Nutrition

Serving: 100g | Calories: 85kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg