நாம் சாப்பிடும் சாப்பாடு ருசியாக மட்டும் இருந்தால் போதாது. உடலுக்கு முழுமையாக ஆரோக்கியம் தரும் உணவாகவும் இருக்க வேண்டும். உடலுக்கு முழுக்க முழுக்க ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடிய தேங்காய் ரசம் எப்படி வைப்பது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தேங்காய், மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம்.
தேங்காயின் மருத்துவத்தன்மை இருதயம், கல்லீரல், சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. தாகம் தணிக்கவும் உடலின் சூட்டைத் தணிப்பதற்கும் இதைவிடச் சிறந்த ஒன்று இல்லை. மிக மிக சுலபமான முறையில் ஆரோக்கியம் தரக்கூடிய முற்றிலும் வித்தியாசமான ஒன்று இந்த தேங்காய் ரசம்.தேங்காய் பரசத்தை உடல் சோர்வுடன் இருப்பவர்களுக்கு வைத்து கொடுத்தால் உடனே உடல் புத்துணர்ச்சி அடைவார்கள். இந்த சமையல் குறிப்பு பதிவில் தேங்காய் வைத்து ரசம் எப்படி வைப்பது என்று கொள்ளலாம்.
தேங்காய் ரசம் | Coconut Rasam Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- உப்பு தேவைக்கேற்ப
- 5 பல் பூண்டு
- 3 பச்சை மிளகாய்
- 1/4 கப் தக்காளி விழுது
தாளிக்க
- நெய் தேவைக்கேற்ப
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பூண்டுப் பல்
- 1 டீஸ்பூன் மல்லித்தூள்
- 1 டேபிள் ஸ்பூன். மிளகுத்தூள்
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலை
- 1 கப் தேங்காய் துருவல்
செய்முறை
- தக்காளியை சுடு நீரில் வைத்து, 10 நிமிடம் கழித்து, மேல் தோல் நீக்கி விட்டு விழுதாக அரைக்க வேண்டும்.
- தேங்காய்,பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி விழுது சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
- பின் அதில் அரைத்த தேங்காய் விழுது, உப்பு, மிளகுத்தூள், மல்லித்தூள் போட்டு லேசாக கொதிக்க விட வேண்டும். நுரைத்து வந்தால் போதும். நெய்யில் தாளித்து ரசத்தில் சேர்க்க வேண்டும்