தித்திக்கும் சுவையில் தேங்காய் மிட்டாய் இப்படி செய்து பாருங்க!

coconut sweet
- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் இந்த தேங்காய் மிட்டாய். 90s காலங்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் இந்த தேங்காய் மிட்டாய். ஆனால் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவாங்க. இப்பொழுதெல்லாம் கடைகளில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : தேங்காய் பால் லட்டு இப்படி செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

கூட அதிக அளவில் விற்கப்படுவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம் இனி வீட்டிலேயே சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக எப்படி தேங்காய் மிட்டாய் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
3 from 1 vote

தேங்காய் மிட்டாய் | Coconut Sweet Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று தான் இந்த தேங்காய் மிட்டாய். 90s காலங்களில் குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு ஸ்வீட் தான் இந்த தேங்காய் மிட்டாய். ஆனால் கடைகளில் தான் வாங்கி சாப்பிடுவாங்க. இப்பொழுதெல்லாம் கடைகளில் கூட அதிக அளவில் விற்கப்படுவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம் இனி வீட்டிலேயே சுலபமாக, குறைந்த நேரத்தில் ருசியாக எப்படி தேங்காய் மிட்டாய் செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Total Time11 minutes
Course: evening, sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: coconut sweet, தேங்காய் மிட்டாய்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 தேங்காய் துருவியது
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 கப் வெல்லம்
  • 2 ஏலக்காய் தட்டியது
  • 1 ஸ்பூன் அரிசி மாவு

செய்முறை

  • முதலில் ஒரு தேங்காயை துருவி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் நெய் விட்டு துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து தனியாக தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து வெல்லத்தை அதே வாணலில் ஒரு டம்பளர் தண்ணீர் ஊற்றி கரைந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்
  • மற்றொரு வாணலில் வெல்லக்கரைசலை ஊற்றி அத்துடன் வறுத்து வைத்துள்ள தேங்காய், மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு கிண்டி அரிசி மாவு, நெய் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி சூடு இருக்கும் போதே தேவையான வடிவில் பிடித்து வைத்துக்கொள்ளவும்.