Home சட்னி சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி செய்யலாம் வாங்க!

சுவையான ஆரோக்கியமான கொத்தமல்லி சட்னி செய்யலாம் வாங்க!

நம்ம இட்லி தோசைக்கு நிறைய சட்னி வகைகள் சாப்பிடிருப்போம். ஆனா நம்ம வீட்ல கொத்தமல்லி புதினா எவ்வளவு இருந்தாலும் என்னதான் நம்ம பிரிட்ஜ் குள்ள வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள்ள அது அழுகி போய்விடும். அப்படி அழுகி போயி வேஸ்ட் ஆகுறதுக்கு முன்னாடியே கொத்தமல்லி வச்சு சூப்பரான ஒரு கொத்தமல்லி சட்னி செய்யலாம் ‌ இட்லி தோசைக்கு தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி தக்காளி சட்னி பூண்டு சட்னி, கார சட்னி அப்படின்னு பல வகையான சட்னி சாப்பிட்டு இருந்தாலும் இப்ப நம்ம செய்யப் போற இந்த கொத்தமல்லி சட்னி ரொம்ப டேஸ்ட்டாவும் உடம்புக்கு குளிர்ச்சியாகவும் உடம்புல இருக்க ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

கொத்தமல்லி கருவேப்பிலை புதினா அப்படின்னு நம்ம சமையல்ல இதுல எது போட்டாலும் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் இது எல்லாத்தையும் ஓரமா எடுத்து வச்சுருவாங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்காகவே நம்ம இந்த கொத்தமல்லிய அரைச்சு சட்னி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா கொத்தமல்லியோட முழு சத்துக்களும் எல்லாருக்கும் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாம இந்த கொத்தமல்லி சட்னி சாப்பிடுவதற்கும் ரொம்பவே சுவையா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி ஏன் வெறும் சாதத்தில் கூட இந்த கொத்தமல்லி சட்னியை போட்டு பிசைந்து சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்பவே அருமையா இருக்கும். இந்த கொத்தமல்லி சட்னி செய்ய நமக்கு ரொம்ப நேரம் எல்லாம் தேவைப்படாது ரொம்பவே சீக்கிரமா இந்த சட்னியை நம்ம செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பரான கொத்தமல்லி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

கொத்தமல்லி சட்னி | Coriander Chutney recipe In Tamil

கொத்தமல்லி கருவேப்பிலை புதினா அப்படின்னு நம்ம சமையல்ல இதுல எது போட்டாலும் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் இது எல்லாத்தையும் ஓரமா எடுத்து வச்சுருவாங்க சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்காகவே நம்ம இந்த கொத்தமல்லிய அரைச்சு சட்னி செஞ்சு கொடுத்தோம் அப்படின்னா கொத்தமல்லியோட முழு சத்துக்களும் எல்லாருக்கும் கிடைக்கும். இந்த கொத்தமல்லி சட்னி செய்ய நமக்கு ரொம்ப நேரம் எல்லாம் தேவைப்படாது ரொம்பவே சீக்கிரமா இந்த சட்னியை நம்ம செஞ்சு முடிச்சிடலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Coriander chutney
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கட்டு கொத்தமல்லி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1/2 கப் தேங்காய் துருவல்
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 பல் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • கொத்தமல்லி இலைகளை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு கொத்தமல்லி இலைகளை சேர்த்து  நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, புளி அனைத்தையும் சேர்த்து வதக்கிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி அனைத்தையும் ஆற வைக்கவும்.
  • அனைத்தும் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். இப்பொழுது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg

இதையும் படியுங்கள் :வெறும் ரெண்டே பொருள் இருந்தால் வீட்டிலேயே ஈஸியா கடலை மிட்டாய் செஞ்சிடலாம்!