வெறும் ரெண்டே பொருள் இருந்தால் வீட்டிலேயே ஈஸியா கடலை மிட்டாய் செஞ்சிடலாம்!

- Advertisement -

கடலை மிட்டாய் அப்போ இருந்து இப்ப வரைக்கும் ஒரு ஹெல்தியான ஸ்நாக்ஸ் அப்படின்னு சொல்லலாம். ஒரு சிலருக்கு வேர்க்கடலையை அப்படியே சாப்பிட பிடிக்கும் ஒரு சில வருத்து சாப்பிடுவாங்க ஒரு சிலர் வேக வச்சு சாப்பிடுவாங்க ஆனா ஒரு சிலருக்கு இனிப்பா வேர்க்கடலையில் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட ரொம்ப பிடிக்கும். கடலை மிட்டாய 90ஸ் கிட்ஸ் மிட்டாய் அப்படின்னு கூட சொல்லலாம். இப்ப இருக்கிற குழந்தைங்க தான் பெருசா இதை ஒரு ஸ்னாக்ஸா மதிக்கிறது இல்ல ஆனா அந்த காலத்துல ஹெல்தியான ஒரு ஸ்நாக்ஸ் எல்லாரும் கடைகள்ல விரும்பி வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் அப்படின்னா அது கடலை மிட்டாய் அப்படின்னு கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

இந்த கடலை மிட்டாயை நம்ம வீட்ல வாங்கி சாப்பிட்டு இருப்போம் இல்ல அப்படின்னா நமக்கு பழைய டேஸ்ட் கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனா பழைய பாரம்பரியமான டேஸ்ட்ல பாகு காய்ச்சி சூப்பரான கடலை மிட்டாய் வீட்டிலேயே செய்ய போறோம். இந்த கடலை மிட்டாய் நம்ம வீட்டிலேயே செய்வதால் ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு கூட சொல்லலாம்.

- Advertisement -

கடைகள்ல அதை செய்யும் போது அதை எப்படி செய்வாங்க அப்படின்னு நமக்கு தெரியாது ஆனா வீட்ல சூப்பரா நம்ம இந்த கடலை மிட்டாய் செஞ்சு முடிச்சிடலாம். வெறும் ரெண்டே பொருள் போதும் ஈஸியான இந்த கடலை மிட்டாய் நம்ம நிறைய செஞ்சு ஸ்டோர் பண்ணி இப்ப ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல இந்த கடைல மிட்டாய் கூட வச்சு கொடுத்து விடலாம். இப்ப வாங்க இந்த சுவையான சூப்பர் டேஸ்டான கடலை மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
2 from 1 vote

கடலை மிட்டாய் | Kadalai Mittai Recipe In Tamil

கடலை மிட்டாயை நம்ம வீட்ல வாங்கி சாப்பிட்டு இருப்போம் இல்ல அப்படின்னா நமக்கு பழைய டேஸ்ட் கிடைக்காமல் இருந்திருக்கும். ஆனா பழைய பாரம்பரியமான டேஸ்ட்ல பாகு காய்ச்சி சூப்பரான கடலை மிட்டாய் வீட்டிலேயே செய்ய போறோம். இந்த கடலை மிட்டாய் நம்ம வீட்டிலேயே செய்வதால் ரொம்பவே ஆரோக்கியமானது அப்படின்னு கூட சொல்லலாம்.வெறும் ரெண்டே பொருள் போதும் ஈஸியான இந்த கடலை மிட்டாய் நம்ம நிறைய செஞ்சு ஸ்டோர் பண்ணி இப்ப ஸ்கூலுக்கு போற குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸ்ல இந்த கடைல மிட்டாய் கூட வச்சு கொடுத்து விடலாம்.
Prep Time5 minutes
Active Time30 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Kadalai Mittai
Yield: 6
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வறுத்த வேர்க்கடலை
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1 கப் வெல்லம்

செய்முறை

  • முதலில் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதனை ஒரு அடி கனமான பாத்திரத்தில் சேர்த்து பாகுபதம் வரும் வரை நன்றாக கிளறி கொண்டே இருக்கவும்.
  • வெல்லத்தை சிறிதளவு எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனை எடுத்து உருட்டி பார்த்தால் வந்து வடிவில் உருட்ட வந்தால் பாகு தயார் என்று அர்த்தம்
  • இப்பொழுதுஅதோடு வறுத்த வேர்க்கடலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாக கிளறவும்
  •  
    ஒரு தட்டு நெய் தடவி அதில் கிளறி வைத்துள்ள கலவையை சேர்த்து ஒரு மணி நேரம் செட் ஆன பிறகு உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எடுத்தால் சுவையான கடலை மிட்டாய் தயார்

Nutrition

Serving: 200g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 14g | Sodium: 199mg | Potassium: 216mg | Fiber: 1.4g | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : வேர்கடலை தக்காளி சட்னி ரோட்டு கடை ஸ்டைலில் இந்த சட்னிக்கு 2 சட்டி இட்லி அவித்தால் கூட பத்தாது!