இட்லி , தோசை , சப்பாத்தி இதெல்லாம் சுவையா இருப்பதற்கு காரணம் நாம தொட்டுக்கொள்ளும் சட்னி, சாம்பார் உடைய சுவைய பொருத்து தான் இருக்கும். அப்படி சுவையாக ரோட்டு கடைகளில் சாப்பிடும் போது இருக்கும் சுவை நமக்கு பல ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.விதவிதமா நிறைய சட்னிகள் இருந்தாலும் வேர்க்கடலை சட்னி பிடத்தவர்கள் அதிகம் இந்த வேர்க்கடலை சட்னி தேங்காய் சேர்த்து செய்து நாம சாப்பிட்டு இருப்போம். இப்போ வேர்க்கடலை கூட தக்காளி சேர்த்து ரோட்டு கடைகளில் இருக்கும் சுவையில் செய்யலாம்.
வேர்க்கடலை புரதச்சத்து நிறைந்த ஒரு உணவு. போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்குரொம்ப நல்லது. அது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் இதை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது.
வேர்க்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால் முடிந்த அளவுக்கு உணவில் வேர்க்கடலை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இன்று நாம் செய்ய போகும் சட்னி அதீத சுவையோட நாக்கில் சாப்பிட்டு முடித்த பிறகும் ஒட்டிட்டு இருக்க போகுது இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட் இது கூட எல்லாம் சேர்த்து சாப்பிடலாம். அருமையான சுவையில் வயிறு நிறைய சாப்பிட்ட நிறைவு வரும். சரி இப்போ வேர்க்கடலை தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
வேர்க்கடலை தக்காளி சட்னி | Peanut Tomato Chutney In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 பெரிய வெங்காயம்
- 3 பூண்டு
- 2 தக்காளி
- 8 காய்ந்த மிளகாய்
- 3 காஷ்மீரி மிளகாய்
- புளி சிறிதளவு
- 3/4 ஸ்பூன் சீரகம்
- 3/4 ஸ்பூன் உப்பு
- 1/4 ஸ்பூன் பெருங்காயம்
- 3 தேக்கரண்டி எண்ணெய்
தாளிக்க
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 காய்ந்த மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு வானெலியை வைத்து வானெலி சூடானதும் எண்ணெய்சேர்த்து அதில் கடலைப்பருப்பு , வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் அதனுடன் காய்ந்த மிளகாய் நிறத்திற்காக காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து ஆறவைத்துகொள்ள வேண்டும்.
- பின் அதே வானெலியில் பூண்டு, வெங்காயம் சேர்த்துகண்ணாடி போல் வதக்கவும் . பிறகு கறிவேப்பிலை , புளி , சீரகம் ,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உப்பு , பெருங்காயம் சேர்த்து தக்காளி நன்றாக குழைந்து போகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குழைந்ததும் இவற்றை தனியாக எடுத்து ஆற வைத்து கொள்ளவேண்டும்.
- முதலில் மிக்ஸியில் கடலைப்பருப்பு , வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின் வதக்கி வைத்துள்ள தக்காளி , பூண்டு , வெங்காயம், புளி கலவையையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கலந்து விட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட் ஏற்ற சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி தயார்.