பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பராத்தா. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். பராத்தா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம்.
என்னதான் பல பேருக்கு விருப்பமான உணவு பிரியாணி தான் என்று சொன்னாலும் அதையும் தாண்டி பிடித்த உணவு அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு என்று வரும் பொழுது பலரும் கூறுவது பராத்தா தான். பராத்தாக்களில் இப்போது வகை வகையாக வந்துவிட்டன. சாதா பராத்தா, வீச்சுப் பராத்தா, சிலோன் பராத்தா, முட்டை கொத்து பராத்தா, பொரித்த பராத்தா, சால்னா பராத்தா, கிளி பராத்தா, நூல் பராத்தா, சிக்கன் பராத்தா, கேரள பராத்தா, கோதுமை பராத்தா என அடுக்கிக் கொண்டே போகலாம்.
பராத்தா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு வித சுவைமிக்க அருமையான உணவு. பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப்படுகின்றன. அதனால் நாம் இந்த பதிவில் கோதுமை மாவு வைத்து சுவையான கொத்தமல்லி பராத்தா எப்படி செய்வதென்று பார்க்கலாம். பராத்தா பிரியர்களுக்கு இந்த மாறுதலான கொத்தமல்லி பராத்தா நிச்சயம் பிடிக்கும். அந்த வகையில் இந்த தொகுப்பில் வீட்டிலேயே எப்படி கொத்தமல்லி பராத்தா செய்யலாம் என்று பார்க்கலாம்.
கொத்தமல்லி பராத்தா | Coriander Paratha Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 கப் கோதுமை மாவு
- உப்பு தேவையான அளவு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- நெய் தேவையான அளவு
- 1 கட் கொத்தமல்லி
- 4 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1/2 டீஸ்பூன் சீரகம்
செய்முறை
- முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி துண்டுகள், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- கோதுமை மாவை தேவையான அளவு ஒரு பவுளில் எடுத்து அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பின் அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது சேர்த்து அதனுடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
- பின் மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து நான்கு பக்கமும் மடித்து மீண்டும் ஒரு முறை தேய்த்துக் கொள்ளவும்.
- ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் விட்டு பராத்தாவை போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு சுட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி பராத்தா தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்