Advertisement
அசைவம்

வார இறுதியில் இந்த கொத்தமல்லி சிக்கன் மிளகு ரோஸ்ட் செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

Advertisement

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

கொத்தமல்லியில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா? ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். நீங்களும் வார‌ இறுதியில் சிக்கன் செய்ய நினைத்தால் கொத்தமல்லி அரைத்து விட்ட இந்த கொத்தமல்லி மிளகு சிக்கன் ரோஸ்ட் செய்யுங்கள். இந்த சிக்கன் ரோஸ்ட் சாதம், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் மசாலா செய்வது மிகவும் சுலபம்.

Advertisement

மேலும் இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். சிக்கனை எப்படி செய்தாலும் அது சுவை கொடுக்கும். அதை பக்குவமாக பார்த்து பார்த்து செய்தால் இன்னும் எத்தனை ருசியாக இருக்கும்..? அப்படியொரு ரெசிபி தான் இது. வேலை நாட்களில் அசைவ உணவு சமைக்க நேரம் இல்லை என கருதுபவர்களும், ஞாயிறு விடுமுறைகளில் மட்டுமே கறி எடுத்து சமைக்க முடியும் என நினைப்பவர்களுக்கு எளிமையாக மற்றும் சுவையாக சிக்கனை சமைக்கும் ரெசிபி. இந்த சிக்கன் ரோஸ்டை பேச்சுலர்ஸ் கூட ஈசியாக செய்து விடலாம்.

கொத்தமல்லி மிளகு சிக்கன் ரோஸ்ட் | Coriander Pepper Chicken Roast Recipe In Tamil

Print Recipe
பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஏனெனில் விடுமுறை நாட்களில் தான் வீட்டில் உள்ளோர் அனைவரும் ஒன்றாக கூடி உட்கார்ந்து பொறுமையாக உணவை ருசித்து சாப்பிட முடியும். அப்படி அனைவரும் சாப்பிட கூடிய பொருளாக சிக்கன் இருக்கிறது. இதில் சிக்கன் குழம்பு, கிரேவி, வறுவல், 65, லாலிபாப் போன்ற பல உணவு வகைகளை செய்யலாம். சிக்கனில் எந்த உணவை கொடுத்தாலும் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். கொத்தமல்லியில் சிக்கன் செய்து சாப்பிட்டிருக்கீங்களா?
Advertisement
ட்ரைப் பண்ணி பாருங்க, அசத்தலாக இருக்கும்! இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் நீங்கள் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Coriander Peper Chicken Roast
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 193

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1/2 கி சிக்கன்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 2 கப் கொத்தமல்லி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 3 டீஸ்பூன் மிளகு தூள்

Instructions

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் மிளகு தூள் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.
  • பின் மல்லி தூள், சீரகத்தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் இதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கி தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்ததும் பொடித்து வைத்துள்ள கொதத்மல்லி சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலந்து கறிவேப்பிலை, மிளகு தூள் தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கொத்தமல்லி மிளகு சிக்கன் ரோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 550g | Calories: 193kcal | Carbohydrates: 13g | Protein: 19g | Fat: 4.79g | Sodium: 95mg | Potassium: 196mg | Fiber: 10.7g | Vitamin A: 74IU | Vitamin C: 109mg | Calcium: 14mg | Iron: 21mg

இதனையும் படியுங்கள் : இதுவரை மாங்காயில் சிக்கன் கறி செய்துள்ளீர்களா? இல்லையென்றால் செய்து பாருங்கள் ருசியாக இருக்கும்!!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 1 ஜூலை 2024!

மேஷம் உடல்நலம் நன்றாக இருக்கும். கடந்த காலங்களில், நீங்கள் முதலீடு செய்த பணத்தின் பலனை இன்று பெறுவீர்கள். இன்று சில…

1 மணி நேரம் ago

தித்திக்கும் தினை அல்வா ஆரோக்கியமான முறையில் இப்படி செய்து பாருங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டவே திகட்டாது!!!

பெரும்பாலும் கடைகளில் விற்கப்படும் ஸ்வீட் வகைகள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற ஸ்வீட்டாக இருக்காது. ஆனால் இன்று…

21 மணி நேரங்கள் ago

வீட்டில் குடைமிளகாய் இருந்தால் வாங்கினால் இந்த குடைமிளகாய் மசாலா தோசை செய்து பாருங்கள் அட்டகாசமாக!

தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும்…

2 நாட்கள் ago

வீடே மணக்கும் சுவையான திண்டுக்கல் ஸ்டைல் குஸ்கா இப்படி செய்து பாருங்கள் இனிமேல் அடிக்கடி செய்வீர்கள்!!!

குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது எல்லாம் வீட்டில்…

4 நாட்கள் ago

தோசை, இட்லிக்கு இப்படி செட்டிநாடு ஸ்டைல் தக்காளி சட்னி செய்து பாருங்கள் இரண்டு அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

குறைந்த செலவில், குறைவான நேரத்தில் சமைக்கும் உணவு தான் சட்னி. இதை பெரும்பாலும் நாம் இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன்…

4 நாட்கள் ago

ஜூன் 27 புதன் உதயத்தால் கவலைகளை எதிர்கொள்ளப் போகும் ராசிக்காரர்கள்

மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன் மயம் என்று கூறலாம். அந்தளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு…

5 நாட்கள் ago