- Advertisement -
வீட்டிலேயே ரொம்ப எளிதான முறையில் கொத்தமல்லி ரோல்ஸ் செய்யலாம். இதை செய்வதற்கு சில நிமிடமே நமக்கு தேவைப்படும். இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்து விடலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி ஆகும். ஒருமுறை செய்து விட்டால் அடிக்கடி வீட்டில் முயற்சி செய்வீர்கள். கொத்தமல்லி ரோல்ஸ் ரெசிபி சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம் வாருங்கள்.
-விளம்பரம்-
கொத்தமல்லி ரோல்ஸ் | Coriander Rolls Recipe In Tamil
வீட்டிலேயேரொம்ப எளிதான முறையில் கொத்தமல்லி ரோல்ஸ் செய்யலாம். இதை செய்வதற்கு சில நிமிடமேநமக்கு தேவைப்படும். இது எல்லோருடைய வீட்டிலும் இருக்கும் பொருளை வைத்து செய்து விடலாம்.இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி ஆகும். ஒருமுறை செய்து விட்டால்அடிக்கடி வீட்டில் முயற்சி செய்வீர்கள். கொத்தமல்லி ரோல்ஸ் ரெசிபி சுலபமாக செய்வது எப்படி? என்பதை இனி பார்ப்போம்வாருங்கள்.
Yield: 4
Calories: 31.07kcal
Equipment
- 1 தோசை கல்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 4 கப் கொத்தமல்லி நறுக்கியது
- 200 கிராம் கடலை மாவு
- 1 கப் தேங்காய் துருவல்
- 2 டீஸ்பூன் கசகசா
- 1 வெங்காயம் நறுக்கியது
- 1 பச்சை மிளகாய்
- உப்பு தேவையானஅளவு
- தண்ணீர் தேவையானஅளவு
- எண்ணெய் பொரிக்க
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
செய்முறை
- முதலில் கொத்தமல்லியைக் கழுவி சுத்தமாக்கி, அதில்துருவிய தேங்காயைச் சேர்த்து பின்னர்அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கசகசா சேர்த்து கலவையாக்கி தனியாக வைத்துக்கொள்ளவும்.
- கடலை மாவுடன் உப்பு சேர்த்து பிசைந்து, சப்பாத்தியைப் போல திரட்டிக்கொள்ளவும்.
- நடுவில் மேலே கூறிய பூரணத்தை வைத்து நான்காக மடித்துகொள்ளவும். முனைகளை ஒட்டுவதற்கு வெண்ணெயை உபயோகிக்கவும். இதை எண்ணெயில் பொரித்து, சுட சுட பரிமாறவும்.
Nutrition
Serving: 100g | Calories: 31.07kcal | Carbohydrates: 1.93g | Protein: 3.52g | Fat: 0.7g | Fiber: 4.66g | Calcium: 184mg | Iron: 1.42mg
- Advertisement -