வீடே மணமணக்கும் கொத்தமல்லி சாம்பார் ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க ஒரு சட்டி சோறும் காலியாகும்!

- Advertisement -

உடல் ஆரோக்கியம் அளிக்கும் கொத்தமல்லி  நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தண்டு எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் கொத்தமல்லி சூப்பராக முளைத்துவிடும். கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மை வாய்ந்தது. கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல் உடலை விட்டு வெளியேறும்.

-விளம்பரம்-

நம் கைகளாலேயே அதை அறுவடை செய்து இப்படி சாம்பாரும் வைத்து சாப்பிட்டால் சொல்லவா வேண்டும்? சதா என்ன குழம்பு செய்வது? என்று குழம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஆரோக்கியமான ஒரு சாம்பார் வைத்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்! நமக்கு மிகவும் சுலபமாக மலிவாகக் கிடைக்கக்கூடிய கொத்தமல்லி கீரை வகைகளில் சத்துக்கள் ஏராளம்.

- Advertisement -

சத்தான பொருட்களை சாப்பிட வேண்டுமென்றால் விலை அதிகமான பொருட்களை தான் சாப்பிடவேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. நம் வீட்டின் அருகிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களின் மதிப்பை நாம் முழுமையாக தெரிந்து கொள்வது கிடையாது. நமக்கு சுலபமாக மலிவாக கிடைக்கக்கூடிய சத்தான பொருட்களின் பட்டியல் ஏராளம். அந்த வரிசையில் இந்த கொத்தமல்லி ஒன்று. . வாரத்தில் ஒரு முறையாவது கொத்தமல்லியை அதிகமாக சாப்பாட்டில் சேர்த்து  சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கும் . ஆரோக்கியமான கொத்தமல்லி சாம்பார் இப்படி வைத்து சாப்பிடுங்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
4.50 from 2 votes

கொத்தமல்லி சாம்பார் | Coriander Sambar Recipe In Tamil

உடல் ஆரோக்கியம் அளிக்கும் கொத்தமல்லி  நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடிஅளவிற்கு கொத்தமல்லி தண்டு எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் கொத்தமல்லிசூப்பராக முளைத்துவிடும். கொத்தமல்லியில் பொட்டாசியம் சத்து அதிகம். ஆகவே உயர் ரத்தஅழுத்தத்தினை குறைக்கும் குணம் கொண்டது. கூடவே ரத்த குழாய்களை சுத்தம் செய்யும் தன்மைவாய்ந்தது. கொத்தமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால், சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப்படாமல்உடலை விட்டு வெளியேறும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Coriander Sambar
Yield: 4
Calories: 38kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் நறுக்கிய கொத்தமல்லி
  • 200 கிராம் சின்ன வெங்காயம்
  • 5 தக்காளி
  • 1 முருங்கைக்காய்
  • 15 பூண்டு
  • 7 பச்சை மிளகாய்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 1/4 கப் பருப்பு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 மேசைக்கரண்டி நெய்
  • 1/2 மேசைக்கரண்டி கல் உப்பு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 வேக வைக்கவும்.புளியுடன் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கரைத்து புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும், பூண்டை நீளவாக்கில் நறுக்கவும், தக்காளியை துண்டுகளாக நறுக்கவும்,
  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி கடுகு தாளித்து அதில் வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் நறுக்கின பூண்டு பச்சை மிளகாய் போட்டு 30 நொடி வதக்கிய பிறகு நறுக்கின தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்,
  • புளிக்கரைசலை ஊற்றி மஞ்சள் தூள் உப்பு முருங்கைக்காய் ஆகியவற்றை போட்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும். வேக வைத்த பருப்பை எடுத்து அதனுடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்கு குழைவாக மசித்து வைத்துக் கொள்ளவும்.
  •  
    பின்னர் புளிக்கலவைக் கொதித்ததும் பாதி அளவு கொத்தமல்லி மற்றும் மசித்து வைத்திருக்கும் பருப்பு தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் கொதிக்க விடவும். சாம்பார் ஒரு நிமிடம் கொதித்து நுரைத்து வரும் போது மீதம் உள்ள கொத்தமல்லி தழையை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி வைத்து விடவும்.
  • வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து அதை சாம்பாருடன் சேர்த்து கிளறி விடவும். சுவை, மனம் நிறைந்த கொத்தமல்லி சாம்பார் தயார். இதை உருளைக்கிழங்கு வறுவலுடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 600g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fat: 0.1g | Fiber: 1.7g | Sugar: 2.2g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg | Iron: 10mg