- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamilnadu
- Course
- LUNCH
மக்காச்சோளம் கடைகளில் கிடைக்கப் பெறுகின்றன. இந்த மக்காச்சோள வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து பார்த்தால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவது உண்டு. அதிலும் இந்தப் புலாவ் வகைகளை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிடுவது வழக்கம். வித்தியாசமான சுவையுடைய ‘மக்காச்சோள புலாவ்’ சுலபமாக நம் வீட்டிலேயே எப்படி செய்வது? என்பதைத் தெரிந்து கொள்ள நீங்களும் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
Ingredients
Method
அரிசியைக் கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீரைவடித்துவிட்டு, அரிசியை கால் டீஸ்பூன் நெய்யில் இரண்டு நிமிடத்திற்கு வதக்கவும். மக்காசோளத்தை உப்பு சேர்த்த தண்ணீரில் போட்டு 10 லிருந்து 15 நிமிடங்கள் வரை பிரஷர் குக்கரில் வெயிட் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
பிரஷர் பானிலோ, குக்கரிலோ எண்ணெய் விட்டு சூடாக்கி பிரியாணி இலை, பட்டை, இலவங்கம் சேர்த்து வதக்கவும். வதங்கியவுடன் அரைத்த விழுது சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
பிறகுவேக வைத்த மக்காச் சோள விதைகளை அதில் மெதுவாகக் கலந்து தேங்காய்ப் பாலையும் விடவும். கலவை கொதிக்கத் துவங்கியவுடன் உப்பையும், அரிசியையும் சேர்க்கவும். நன்றாகக் கலந்து மறுபடியும் கொதிக்க ஆரம்பித்தவுடன் மூடியால் மூடி வைக்கவும். குறைந்த தணலில் வைத்து உடனே வெயிட் போடவும்.
பத்துநிமிடங்களுக்கு குறைந்த தனாவிலேயே வைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். வெயிட்டை எடுத்து பின் கலந்து விடவும். பரிமாறும் கிண்ணத்திற்கு மாற்றி வறுத்த முந்திரிப் பகுப்பால அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.






