நண்டு ரோஸ்ட் ஒரு அசைவ உணவு. நண்டு பொதுவாக அனைத்து நாட்களிலும் எளிதாக கிடைக்கும் ஒரு அசைவம் ஆகும். பொதுவாக நண்டு ரசம் நண்டு கிரேவி போன்றவற்றை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இந்நிலையில் இப்போது நாம் நண்டு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
காரசாரமான ஒரு நண்டு ரோஸ்ட் எப்படி வைப்பது என்று தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அசைவ சாப்பாடில் நண்டு போட்டு வைக்கும் நண்டு ரோஸ்ட் சுவை, அச்சு அசலாக அப்படியே பாரம்பரிய நண்டு ரோஸ்ட் கிடைக்கும். சொன்னா நீங்க நிச்சயம் நம்ப மாட்டீங்க. ஒரே ஒரு முறை இந்த குறிப்பில் இருக்கும் அளவுகளோடு எல்லா பொருட்களையும் சேர்த்து நண்டு ரோஸ்ட்வச்சு பாருங்க. திரும்பத்திரும்ப செஞ்சிக்கிட்டே இருப்பீங்க. இதை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு சுவையான நண்டு ரோஸ்ட் எப்படி செய்வது என்பதை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.
நண்டு ரோஸ்ட் | Crab Roast Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- 3 எண்ணெய்
- 2 பெரிய வெங்காயம்
- 5 மேசைக்கரண்டி தேங்காய்பால்
- 4 மேசைக்கரண்டி மிளகு பவுடர்
- உப்பு தேவைக்கேற்ப
- 2 தேக்கரண்டி மிளகாய் பொடி
- 2 தேக்கரண்டி சீரகப்பவுடர்
- 2 கிலோ நண்டு
செய்முறை
- முதலில் நண்டை சுத்தம் செய்து துண்டங்கள் செய்யவும், பின்பு வெங்காயத்தை பொடிதாக நறுக்கவும்.
- அதன் பின் வாயகன்ற கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விடவும், சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பிறகு அதில் மிளகாய் பவுடர் போட்டு வதக்கி மேலும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு வாசனை வரும் வரை கிளறவும். பிறகு அதில் நண்டு துண்டங்களைப் போட்டு கிளறவும்
- பின்பு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து கடைசியில் தேங்காய்பால் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.மிதமான தீயில் மூடி வேகவிடவும்,
- அடுத்துதிறந்து கிளறி விடவும், நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து மசாலா கெட்டியானவுடன் இறக்கவும். சுவையான நண்டு ரோஸ்ட்.