மொறு மொறுன்னு காரமா சிக்கன் சாப்பிடணும்னு ஆசையா இருந்தா இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

சிக்கன் அப்படின்னு சொன்னாலே நிறைய பேருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு சிக்கன் பிரியர்கள் இங்க நிறைய பேர் இருக்காங்க. சிக்கன் வச்சு நம்ம செய்யக்கூடிய உணவுகள் ஏராளமா இருக்கு சிக்கன் பிரியாணி ,சிக்கன் தொக்கு, சில்லி சிக்கன் சிக்கன் 65, சிக்கன் பெப்பர் ஃப்ரை, சிக்கன் கிரேவி, சிக்கன் மஞ்சூரியன் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம் அந்த அளவுக்கு நம்ம சிக்கன் வச்சு நிறைய உணவுகள் செய்யலாம் ஆனால் சிக்கன் வைத்து செய்யக்கூடிய எல்லா உணவுகளுமே ரொம்பவே சூப்பரா நமக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

டேஸ்டும் ரொம்பவே அட்டகாசமா இருக்கும் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் சிக்கன் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இந்த பனி காலத்துக்கும் மழைக்காலத்துக்கும் ஏற்ற வகையில நல்லா காரசாரமா உங்களுக்கு சிக்கன் சாப்பிடணும்னு ஆசையா இருந்தா இந்த கிறிஸ்டின் மிளகாய் சிக்கன ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க இந்த டேஸ்ட் உங்களுக்கு ரொம்பவே பிடிச்சு போயிடும்.

- Advertisement -

ஒரு தடவை இந்த மிளகாய் சிக்கன செஞ்சீங்கன்னா அடிக்கடி நீங்க செஞ்சுக்கிட்டே தான் இருப்பீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். தயிர் சாதம் பால் சாதம் கலவை சாதம்ன்னு எல்லாத்துக்கும் இத சைடிஷா வச்சு சாப்பிட்டோம் அப்படின்னா இன்னும் ஒரு தட்டு சாதம் நம்ம எக்ஸ்ட்ராவே சாப்பிடுவோம் அந்த அளவுக்கு இதோட சுவை நம்மள இழுக்கும் அப்படின்னே சொல்லலாம்.

இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன குழந்தைகளுக்கு கொடுக்குறத அவாய்ட் பண்ணிக்கோங்க குழந்தைகளுக்கு கொடுக்குற மாதிரி இருந்துச்சு அப்படின்னா காரம் கொஞ்சம் கம்மி பண்ணிக்கோங்க. காரம் கொஞ்சம் கம்மி பண்ணாலும் இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் ரொம்பவே டேஸ்டா தான் இருக்கும். எப்பவுமே நம்ம ஒரே மாதிரியான சிக்கன் வெரைட்டி செஞ்சு போர் அடிச்சு போய் இருக்கோம் அதனால ஒரு தடவை இந்த மாதிரி நம்ம முயற்சி செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம். இப்ப வாங்க இந்த கிரிஸ்பி மிளகாய் சிக்கன் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
1 from 1 vote

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் | Crispy Milagai Chicken In Tamil

இந்த மிளகாய் சிக்கன செஞ்சீங்கன்னா அடிக்கடி நீங்க செஞ்சுக்கிட்டே தான் இருப்பீங்க அந்த அளவுக்கு செம டேஸ்டா இருக்கும். தயிர் சாதம் பால்சாதம் கலவை சாதம்ன்னு எல்லாத்துக்கும் இத சைடிஷா வச்சு சாப்பிட்டோம் அப்படின்னா இன்னும்ஒரு தட்டு சாதம் நம்ம எக்ஸ்ட்ராவே சாப்பிடுவோம் அந்த அளவுக்கு இதோட சுவை நம்மள இழுக்கும்அப்படின்னே சொல்லலாம். எப்பவுமே நம்ம ஒரே மாதிரியான சிக்கன் வெரைட்டி செஞ்சுபோர் அடிச்சு போய் இருக்கோம் அதனால ஒரு தடவை இந்த மாதிரி நம்ம முயற்சி செஞ்சு சாப்பிட்டுபார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Fry
Cuisine: tamil nadu
Keyword: Crispy Chilli Chicken
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கிலோ சிக்கன்
  • 4 காய்ந்த மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 எலுமிச்சை பழம்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 கொத்து எண்ணெய்

செய்முறை

  • முதலில் பச்சை மிளகாயையும் காய்ந்து மிளகாயையும் தனித்தனியே இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதோடு மஞ்சள் தூள் உப்பு மிளகாய் தூள், எடுத்து வைத்த பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் எலுமிச்சை சாறு அனைத்தையும் சேர்த்து பிரட்டி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  • ஃப்ரிட்ஜில்ஊற வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அதில் கரம் மசாலா சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • ஒரு கடாயில் சிக்கனை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக வைத்து சிக்கனை போட்டுநன்றாக பொறித்து எடுக்கவும்.
  • இரண்டு பக்கமும்ந ன்றாக வெந்த பிறகு எடுத்தால் மொறு மொறுப்பான காரமான க்ரிஸ்பி மிளகாய் சிக்கன் தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : இனி சிக்கன் சுக்கா செய்ய நினைத்தால் மதுரை ஸ்டைலில் சிக்கன் சுக்கா இப்படி செஞ்சி பாருங்கள்!

-விளம்பரம்-