இளமையாக இருக்க வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால் வாழ்க்கையில் முதுமை என்ற ஒன்று கட்டாயம் ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் வரத்தான் செய்யும். ஆனால் எப்போதுமே சுறுசுறுப்பாக சந்தோஷமாக இருந்துகொண்டு, மனதை அமைதியாக வைத்துக் கொண்டு, ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் முதுமையை ஒரு கை பார்த்து போடலாம்.
அப்படி ஒரு உணவைத்தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம். இதற்கு சமைத்து கஷ்டப்பட வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது. சமைக்காமல் அப்படியே தயார் செய்து சாப்பிடக்கூடிய, உடலுக்கு இளமையைக் கொடுக்கக்கூடிய வெள்ளரி சாலட் ரெசிபி உங்களுக்காக.இன்றைய காலகட்டத்தில் நோய் நொடி இல்லாத மனிதர்கள் அரிதாகி விட்டனர் . வீட்டிற்கு ஒருவராவது தினமும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய வாழ்வியல் மாற்றங்கள் தான். முன்பை போல் உடல் உழைப்பு அதிக அளவு இல்லாததோடு உணவிலும் பலவகையான மாற்றங்களை செய்து விட்டோம். ஆகையால் அதன் விளைவுகளையும் நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம்.
முதலில் நம்முடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு முடிந்த அளவு அடுப்பில் வைத்து சமைக்காத காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி ஒரு நன்மை தரக்கூடிய அதிக சத்துமிக்க ஒரு வெள்ளரி சாலட்டை எப்படி செய்வது என்று தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
வெள்ளரி சாலட் | Cucumber Salad Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 வெள்ளரிக்காய்
- 1 கப் முட்டைகோஸ் நீளமாக மெல்லியதாக நறுக்கியது
- பாதி தக்காளி
- 1 மேசைக்கரண்டி தயிர்
- 1 தேக்கரண்டி லெமன் சாறு
- 1/2 தேக்கரண்டி மிளகு தூள்
- உப்பு சிறிதளவு
- 1 சிட்டிகை சர்க்கரை
செய்முறை
- வெள்ளரியை துருவி வைக்கவும். கோஸை சன்னமாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியின் விதை பாகத்தை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். தேவையான இதரப் பொருட்களை எடுத்து வைக்கவும்.
- முதலில் வெள்ளரியை பரிமாறும் தட்டில் பரப்பி விடவும்.
- நடுவில் நறுக்கின கோஸை வைத்து, எலுமிச்சை சாறை பிழியவும்
- பின்னர் தயிர், தக்காளியை விருப்பம் போல் வைக்கவும். அதன்பிறகு உப்பு, சர்க்கரை, மிளகுதூள் தூவி பரிமாறவும்.
- தேவையென்றால் மல்லி இலை/ புதினா தூவி விருப்பம்போல் அலங்கரித்துக் கொள்ளலாம்.
- மதியவேளைகளில் உணவுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். உடலிற்கு நல்லது.