இந்த வெயில் காலத்துக்கு டெய்லி நம்ம குழம்பு ஊத்தி சாப்பிடுறோமோ இல்லையோ கண்டிப்பா தயிர் மோர் ஊத்தி சாப்பிடுவோம். ஆனா சாப்பாட்டுக்கு தயிர் மோர் ஊத்தி சாப்பிடுவது போரடிச்சுருச்சு அப்படின்னா ஒரு தடவ இனி இட்லி வச்சு தயிர் மினி இட்லி செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு போர் அடிக்கவும் செய்யாது டேஸ்டும் அல்டிமேட் ஆக இருக்கும்.
அந்த இட்லில லைட்டா ஸ்கூல் வச்சு அங்கங்க குத்தி விட்டு தயிர்ல ஊற வச்சு அதுல தயிர் இட்லி செஞ்சு சாப்பிட்டா நீங்க நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு டேஸ்ட் உங்களுக்கு கிடைக்கும். பிரேக் பாஸ்ட் கோ இல்ல லஞ்சுக்கு இந்த தயிர் மினி இட்லியை செஞ்சு சாப்பிடலாம் லாஸ்ட்டா கொத்தமல்லி இலைகள் எல்லாம் சேர்த்து எனக்கு நான் நீங்க நிஜமாவே நினைச்சு பார்க்க முடியாத அளவுக்கு ஒரு சூப்பரான தயிர் மினி இட்லி ரெடியா இருக்கும்.
மினி இட்லி செஞ்சா அதுல பொடி மினிட்லி செஞ்சு சாப்பிடுவோம் ஆனா தயிர் வடை மாதிரியே தயிர் மினி இட்லி செஞ்சு சாப்பிட போறோம் இது சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். தயிர் பிடிக்கும் அப்படினா கண்டிப்பா இந்த தயிர் மினி இட்லியும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இப்ப வாங்க இந்த டிஃபரண்டான டேஸ்டான அல்டிமேட் ஆன தயிர் மினி இட்லி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
தயிர் மினி இட்லி | Curd Mini Idly Recipe In Tamil
Equipment
- 1 இட்லி பாத்திரம்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 10 மினி இட்லி
- 1 கப் தயிர்
- 1 டீஸ்பூன் சாட் மசாலா
- 1 டீஸ்பூன் சீரகத்தூள்
- 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
- 1/4 கப் மாதுளை
- 1/4 கப் முளைக்கட்டிய பச்சை பயிறு
- கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் தயிர் உப்பு இட்லி சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
- பிறகு அதில் சாட் மசாலா சீரகத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- பிறகு அதில் மாதுளை முளைகட்டிய பச்சை பயிறு சேர்த்து இறுதியாக கொத்தமல்லி தலைகள் தூவி இறக்கினால்சுவையான தயிர் மினி இட்லி தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : அவசர நேரத்தில் கைகொடுக்கும் பருப்பு இல்லாத இட்லி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்!