சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட ருசியான தயிர் உருளைக்கிழங்கு கிரேவி ஒரு தரம் வீட்டில் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

நம்ம இவ்வளவு நாளா சப்பாத்திக்கு அடுப்புல வச்சு கொதிக்க வைத்து இறக்குங்க கிரேவி தான் ஊத்தி சாப்பிட்டுருப்போம் ஆனா ஃபர்ஸ்ட் டைம்மா அடுப்பில் வைத்து கொதிக்க வைக்காம சிம்பிளா சீக்கிரமா செய்யக்கூடிய அருமையான டேஸ்ட்ல இருக்கக்கூடிய தயிர் உருளைக்கிழங்கு கிரேவி இப்ப பாக்க போறோம். இந்த தயிர் உருளைக்கிழங்கு கிரேவிய சப்பாத்தி பூரிக்கு மட்டுமில்லாமல் வெறும் சாதத்துல சுடு சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். நம்ம மோர் குழம்பு சாப்பிட்டிருப்போம் ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல ரொம்பவே அருமையா இருக்கும்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு எப்ப உன் தயிர் சாதமே கொடுத்து விடாமல் கொஞ்சம் டிஃபரண்டா இந்த தயிர் உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு சாதத்துக்கு கொடுத்துவிடலாம் கூடவே முட்டை காரசாரமா செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஸ்கூல் போற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் ஆபீஸ் போறவங்களுக்கும் செஞ்சு கொடுத்தா உங்களை பயங்கரமா பாராட்டுவாங்க. இது நம்ம அடுப்புல வச்சு கொதிக்க வைக்க தேவையில்லை அப்படின்றதால ரொம்பவே சீக்கிரத்துல நம்ம இந்த கிரேவிய செஞ்சி முடிச்சிடலாம்.

- Advertisement -

இதுவரைக்கும் நீங்க சாப்பிடாத ஒரு டேஸ்ட்ல ரொம்ப வித்தியாசமா அருமையாகவும் இருக்கும். இப்போ வெயில் காலம் வேற வரப்போகுது அப்போ நம்ம குழந்தைகளுக்கு அதிகமா குளிர்ச்சியான பொருட்களை சாப்பிட கொடுக்கணும் அந்த வகையில இதையும் நீங்க செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்க குழந்தைங்க அந்த வெயில் காலத்துக்கு அடிக்கடி கேட்பாங்க. இப்ப வாங்க இந்த சுவையான தயிர் உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

தயிர் உருளைக்கிழங்கு கிரேவி | Curd Potato Gravy

குழந்தைகளுக்கு எப்ப உன் தயிர் சாதமே கொடுத்து விடாமல் கொஞ்சம் டிஃபரண்டா இந்த தயிர் உருளைக்கிழங்கு கிரேவி செஞ்சு சாதத்துக்கு கொடுத்துவிடலாம் கூடவே முட்டை காரசாரமா செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ஸ்கூல் போற குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் ஆபீஸ் போறவங்களுக்கும் செஞ்சு கொடுத்தா உங்களை பயங்கரமா பாராட்டுவாங்க. இது நம்ம அடுப்புல வச்சு கொதிக்க வைக்க தேவையில்லை அப்படின்றதால ரொம்பவே சீக்கிரத்துல நம்ம இந்த கிரேவிய செஞ்சி முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான தயிர் உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Curd Potato Gravy
Yield: 4
Calories: 113kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 உருளைக்கிழங்கு
  • 1/4 லிட்டர் தயிர்
  • 2 டேபிள் ஸ்பூன் வெள்ளை எள்
  • 2 பெரிய வெங்காயம்
  • 4 பச்சைமிளகாய்
  • 1/4 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து அதனை வெட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் வெள்ளை எள் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸிஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தயிர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.
  • பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் விதைகளை எடுத்து நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பிறகு பொடித்து வைத்துள்ள எள் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து வெந்தயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அதனை தாளிப்பாக சேர்த்து இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்த்தால் சுவையான தயிர் உருளைக்கிழங்கு கிரேவி தயார்.

Nutrition

Serving: 150g | Calories: 113kcal | Carbohydrates: 46g | Protein: 23g | Sodium: 48mg | Potassium: 171mg | Fiber: 3g | Calcium: 1.1mg

இதையும் படியுங்கள் : மதுரை ஸ்டைல் உருளைக்கிழங்கு பொடிமாஸ்‌ இப்படி ஒரு முறை வீட்டில் செய்து பாருங்கள்!